அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்கக் கூடாது ஏன்?

ஏப்ரல் 01-15

இதில் இடம் பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா இந்துத்துவா மனப்பான்மை கொண்டவர். ராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்டுவது என்று பச்சையாகக் கருத்துக் கூறியவர் (29.7.2003).

  • தமிழ்நாட்டின் நீண்டகால எதிர்பார்ப்பான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமன் பெயரைச் சொல்லி (இராமன் பாலம்) எதிர்க்கிறது – இதற்காக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளது.
  • ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் முரண்பட்ட அபிப்பிராயங்களைக் கொண்ட கட்சிகளின் கூட்டணி இது.
  • பொடா சட்டத்தை விருப்பு வெறுப்பு அடிப்படையில் பயன்படுத்தியவர் ஜெயலலிதா.

அ.தி.மு.க. பற்றி மார்க்சிஸ்ட் தலைவர்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் பேசியதாவது: தமிழகத்தில் மதவெறி அபாயம் கவ்வியிருந்த நேரத்தில் மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய கட்சிதான் அ.தி.மு.க. இன்று வரை மக்கள் நலம் பயக்கக்கூடிய திட்டங்களைத் தீட்டவோ அல்லது மத நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவோ அ.தி.மு.க. முன் வரவில்லை. அப்படிப்பட்ட அ.தி.மு.க.வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சிகளோ கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

(தீக்கதிர் 21.6.2008)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *