சேது சமுத்திரத் திட்டம்
நிச்சயம் நிறைவேறும்!
1. கே: சேகுவேராவின் மகள் தங்களைச் சந்தித்த நிகழ்வில் தாங்கள் குறிப்பிடத்தக்க செய்தியாக எதைக் கூற விரும்புகிறீர்கள்?
– விடுதலை விரும்பி, ஆலந்தூர்.
ப: 1) மக்களது எழுச்சி உணர்வுகளை திரண்டிருந்த அவையின் ஆரவாரத்தின் மூலம் புரிந்துகொண்டஅந்தப் புரட்சிகர வீராங்கனை,
அவரும் “தமிழ்நாடு’’ என்று உரக்கச்சொல்லுங்கள்! என்று முழக்கமிட்டது, திராவிடத்தின் பெருமைதிக்கெட்டும் உலகம் முழுவதும்
பரவுவதன் அடையாளம்.
2) நான் யாருடைய மகள் என்பது முக்கியமல்ல, சமூகத்திற்கும் நாட்டிற்கும் நாம் ஆற்றிய பணிகள்,பங்களிப்பின் கனபரிமாணம்
பற்றி எண்ணி, அகமதிப்பீடுகளைச் செய்ய வேண்டும் என்பது கல்லில் செதுக்கவேண்டிய கருத்தாழம் மிக்க அறிவுரை!
2. கே: குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடித் தொடர்பு பற்றிய பி.பி.சி.ஆவணப்படம் குறித்து தங்கள் கருத்து என்ன?
– கண்ணப்பன், கரூர்.
ப: உண்மை கசக்கும் _ “உண்மை ஒரு நாள் புலியாகும்; பொய்யும் புரட்டும் அதற்குப் பலியாகும்’’ என்ற பட்டுக்கோட்டைக் கவிஞரின் சாகா
வரிகள் நினைவுக்கு வருகின்றன.
3. கே: திரிபுராவில் எதிர்க் கட்சியினர்மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல் போன்று பரவலாக இந்தியா முழுமையும் நடைபெறுவது, ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலின் விளைவுதானே?
– தமிழரசி, வாலாஜாபாத்.
ப: பா.ஜ.க. “ஆர்.எஸ்.எஸ்.என்பவை வன்முறையில் ஈடுபட்ட அமைப்புகள் என்பதால்தான் இந்தியாவிலேயே 3 முறை ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.அதுபோதும் பயங்கரவாதகுற்றவாளிகளும் அக்கட்சி எம்.பிக்களாக உள்ளனரே!
4. கே: ராமர் பாலத்திற்கு ஆதாரமில்லையென்று ஒன்றிய அரசின் அமைச்சர் கூறியதற்கு முரணாக, ராமர்பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பரிசீலனை என்ற செய்திமுரண் அல்லவா? வளர்ச்சியைத் தடுக்கும் சதியல்லவா?
– சந்திரன், திருபெரும்புதூர்.
ப: முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் காவி ஆட்சி_ காலத்தின் கால் நிலையாகப் புதைந்துள்ளதை அசைக்க முடியாது! இறுதி வெற்றி
நியாயத்திற்கே சில ஆண்டுகளில் சேது சமுத்திரத் திட்டம் முழுவடிவம் பெறும் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
5. கே: அறிவியல் சார்ந்த ஆர்வத்தைமாணவர்களிடம் தூண்ட வேண்டும் என்ற அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதை செயல்படுத்திட என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குவீர்களா?
– மகேஸ்வரி, திருச்சி.
ப: பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவரின் செயல்திறனும்வேகமும் மிகவும் பாராட்டத்தக்கவை.
தேவைப்படும்போது அறிவியல் மனபாங்கு பற்றிய விளக்கங்களை பாடநூல்களில் இணைப்பார்.அறிவியலில் நம்பிக்கையுள்ள,
முரண்பாடற்ற முழு பகுத்தறிவுவாதிகளை அவர் தக்க வகையில்பயன்படுத்தினால் எளிதில் இப்பணி வெற்றியாக முடியும்!
கற்பதைவிட, முன்பு தவறாகக்கற்றதை வெளியேற்றிடும் பாடங்களைப் புதிதாக எழுதி, ராகு,கேது பாம்புகளால் கிரகணம்
ஏற்படுகிறது என்பனபோன்ற மூடத்தனமான, அறிவியலுக்கு முரணானவைகளை மாணவர்களிடமிருந்து வெளியேற்றும்
வகையில் திட்டம்(learn to unlearn திட்டம்)வேண்டும்.
6. கே: வடமாநிலத்தவர் தமிழ்நாட்டில் திட்டமிட்டே குடியேற்றப்படுவதாய் அய்யம் எழுந்துள்ள நிலையில் சட்டரீதியாக நாம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
– ஏழுமலை, ஆண்டிப்பட்டி.
ப: தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் இதுபற்றி சிறப்பாகச் சிந்திக்கிறார்கள். நிச்சயம் செயல்படுவார்கள். அவர்கள் அலட்சியமாக இல்லை. தக்கவகையில் செயல்படுவார்கள்.
7. கே: பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்ஸில் பொறுப்பிலுள்ள வழக்குரைஞரை நீதிபதியாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது
நீதித்துறையைப் பாழாக்கிவிடாதா? தடுக்க வழியென்ன?
– விவேக், செங்கை.
ப: உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றியஅரசின் நீதித்துறைக்கும் நடைபெறும் கருத்தியல் போரில், இது இப்போது தற்காலிமாக நிறுத்தப்பட்டது
என்றாலும், தக்கவர்கள் _ மக்கள்போராட்டம் நடத்தியே நிறுத்திடவேண்டும்.
8. கே: கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற கேடுகளைத் தடுக்கக் கடமையுள்ள காவல்துறையினர் கடவுளிடம் இந்தப் பொறுப்பை
ஒப்படைத்து வேண்டுதல் நடத்தியதைப் பற்றி தங்கள் கருத்து என்ன? – கோவிந்தன், மதுராந்தகம்.
ப: மகாவெட்கக்கேடு! திருச்சி,
புதுக்கோட்டையில் முன்பு ஒருமுறை இதுபோல நடந்தபோது, நாமே நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு மன்னிப்புக் கேட்க வைத்தோம். இவ்வாட்சியிலும் தேவைப்படுமா, அதே நடவடிக்கை?