1. 144 தடை உத்தரவையும் மீறித் தம் மனைவி மறைவுற்றதற்கு மறுநாளாகிய 12.5.1933 அன்று பெரியார் கிறித்துவத் திருமணத்தை செய்து வைத்ததால் கைது செய்யப்பட்ட ஊர் எது?
அ) தஞ்சை ஆ) சேலம் இ) திருச்சி ஈ) காரைக்குடி
2. அவர் தமிழர்களின் பொதுச் சொத்து, பொதுச் சொத்து நாதியற்றதாகும் என்று அவரை விட்டுவிடாமல் எல்லோரும் தங்கள் சொந்த சொத்தைப்போல் கவனமாகக் காப்பாற்றியாக வேண்டும் யார் யாரைப்பற்றிக் கூறியது?
அ) அறிஞர் அண்ணாவைப்பற்றிப் பெரியார் ஆ) பெரியாரைப்பற்றி அன்னை மணியம்மையார் இ) பெரியாரைப்பற்றிக் காமராசர் ஈ) அன்னை நாகம்மையாரைப் பற்றிப் பெரியார்
3. பெரியார் அவர்கள் தமது சொற்பொழிவுகளில் திருக்குறளை மேற்கோள்களாகக் கையாண்ட தற்குக் காரணம்?
அ) அது உலகப் பொதுமறை என்பதால் ஆ) அவருடைய சொற்பொழிவுக்கு ஆதாரம் சேர்க்க இ) பெரியாருடைய கருத்துக்கள் திருக்குறளில் இருந்தமையால் ஈ) திருக்குறளை எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதால்.
4. உலகம் விரும்பியதைக் கூறாது உலகுக்கு வேண்டியதைக் கூறிய பெரியார் அவர்களுக்கு முதன்முதலில் முழு உருவச் சிலை வைத்தது எந்த ஊரில்?
அ) சென்னை ஆ) ஈரோடு இ) திருச்சி ஈ) தஞ்சை
5. உலகம் சுற்றும் வாலிபராகப் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பப் பெரியார் அவர்கள் பயணம் செய்த தூரம் பூமியின் சுற்றளவைப் போல் எத்தனை மடங்கு?
அ) 15 மடங்கு ஆ) 8 மடங்கு இ) 33 மடங்கு ஈ) 3 மடங்கு
6. இராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று பெரியார் கூறியபோது மகாபாரதத்தையும் சேர்த்துக் கொளுத்துங்கள் என்று கூறியவர் யார்?
அ) சுப்ரமணிய பாரதியார் ஆ) சோமசுந்தர பாரதியார் இ) சுத்தானந்த பாரதியார் ஈ) பாரதிதாசனார்
7. காசிக்குச் சென்று திரும்பிவந்த பெரியாரிடம் அடே ராமசாமி இவ்வளவு நாளாய் எப்படியடா சாப்பிட்டாய்? என்று கேட்ட தந்தைக்குப் பெரியார் அளித்த பதில்
அ) உணவு விடுதியில் சாப்பிட்டேன் ஆ) உறவினர் வீட்டில் சாப்பிட்டேன் இ) நண்பர் வீட்டில் சாப்பிட்டேன் ஈ) நாம் ஈரோட்டில் கொடுக்கும் சதாவிருத்தியை (பிச்சை) எல்லாம் வசூல் பண்ணிவிட்டேன்.
8. அம்பேத்கர் போராட்டங்களுக்கு வைக்கம் வரலாறு ஓர் உந்து சக்தியாக இருந்தது என்று பகீஷ் கரித் பாரத் என்ற பத்திரிகை எந்த ஆண்டு எழுதியது?
அ) 1925 ஆ) 1926 இ) 1927 ஈ) 1928
9. காஞ்சிபுரம் மாநாட்டுப் பந்தலை விட்டும் காங்கிரசை விட்டும் வெளியேறிய பெரியார் தம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வர உடனடியாக மேற்கொண்ட திட்டம் என்ன?
அ) சுயமரியாதை இயக்கம் கண்டார். ஆ) காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தார். இ) மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ஈ) நீதிக் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார்.
10. காந்தி – பெரியார் சந்திப்பு பெங்களூரில் எப்போது நடைபெற்றது?
அ) ஆகஸ்டு 1927 ஆ) ஆகஸ்டு 1930 இ) ஆகஸ்டு 1937 ஈ) ஆகஸ்டு 1947
பெரியாரை அறிவோமா – விடைகள்
1.இ,
]2.ஆ,
3.இ,
4.இ,
5.இ,
6.ஆ,
7.ஈ,
8.இ,
9.அ,
10.அ