ஆசிரியர் பதில்கள்

ஏப்ரல் 16-30

கேள்வி : தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் 2023 – வளர்ச்சியைக் கொடுக்குமா? – வெ. சுப்பிரமணியன், சடுகனி

பதில் : அது செயல்படுத்தப்படும் முறையையும், நிதி ஆதாரத்தையும் பொறுத்தது. அய்ந்தாண்டு களுக்கு ஒருமுறை வரும் கேள்வி :தேர்தலும், அதன் முடிவுகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே!

கேள்வி : மதவாதி அன்னா ஹசாரேவை சமூக ஆர்வலர் என்று கூறுவது ஏன்? – வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில் : சமூகத்தில் உள்ள ஜாதி, மூடநம்பிக்கை, மதவெறி இவற்றைப் பற்றி முன்னுரிமை தராமல் எதிர்நீச்சல்காரராக இல்லாமல், எல்லோரும் நீரோட்டத்தோடு ஓடி புகழ்வேட்டை ஆடும் பொய்யர் அவர். அச்சொல் கொச்சைப்படுத்தப்படுகிறது!

கேள்வி : மனிதநேயம் அதிகமிருப்பது ஆத்திகர் களிடமா? நாத்திகர்களிடமா? – ஆ. குறள்மணி, குளச்சல்

பதில் : ஆத்திகர்கள் தலைவிதியை, -தலையெழுத்தை நம்பி ஏற்றுக்கொண்டு வெளியே வர முயற்சி செய்யாதவர்கள் – தத்துவப்படி.

பதில் : நாத்திகர்கள் அதனையே மாற்றி விடியலைத் தேடும் வித்தகர்கள். எனவே இவர்களிடம்தான் மனிதநேயம் இயல்பாகவே அதிகம் இருக்கும்!

கேள்வி : சிங்கப்பூரில் ஜோதிடம், செய்வினை, மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு அரசு தடை விதித்துள்ளதா? – கோவி. கண்ணன், திருவெண்ணெய்நல்லூர்

பதில் : சிங்கப்பூராக பல துறைகளில் நமது நாடும், அரசும் அமைந்தால், மக்கள் ஒரு புது உலகை, வாழ்வைக் காண்பார்களே!

கேள்வி : இறப்புக்குப் பின்னர் என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சி தேவையா? – ஜி.சரஸ்வதி, பெரம்பலூர்

பதில் : அது வேலையற்ற மனிதர்களின் மூளையற்ற செயல்கள் – சுரண்டல்காரர்களின் சொக்கட்டான் விளையாட்டு! சோம்பேறி களின் வேதாந்த விசாரணை!!

கேள்வி : அறிவுக்கும் பகுத்தறிவிற்கும் உள்ள வேறுபாடு என்ன? – பி. கோவிந்தசாமி, ஆனூர்

அறிவு – அறிந்து கொள்ளுதல். பகுத்தறிவு – எது நல்லது, எது கெட்டது, எது தேவை, எது தேவையற்றது என்று  பகுத்தறிதல் – புரிதல்.

கேள்வி : அக்கிரகாரத்தில் வீட்டுக்கொரு வெள்ளைப் புடவை அணிந்த பெண் இருந்த நிலை மாறி, இன்றைக்கு எங்கேயும் பார்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது பெரியாருக்கு முந்தைய பாரதியாலா? பாரதிக்குப் பிந்திய பெரியாராலா? – சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை

பதில் : கொஞ்சம் பாரதியாரால். சமுதாயப் புரட்சி – பெரிய அளவில் மாற்றம் – தந்தை பெரியாரால். அவர்தம் இயக்கத்தால்.

கேள்வி : எப்போது பார்த்தாலும் நேரமில்லை, நேரமில்லை என்று கூறிவரும் நண்பர் களுக்கு தங்களின் பதில் என்ன? – மா.அழகிரிதாசன், கல்மடுகு

பதில் : அவர்களுக்குப் பதில் எழுத எனக்கு நேரமில்லை!

கேள்வி : இருளர் பெண்கள் பலாத்கார வழக்கில் ஒரு போலீசாரைக்கூட கைது செய்யாதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளதே. இது அரசுக்கு இழிவுதானே? – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : கொடுமை; சமூக அநீதி. அ.தி.மு.க. அரசில் ஒரு பெண் முதல் அமைச்சராக இருக்கும் ஆட்சிக்கே அவமானம்!

கேள்வி : லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்பு களால் நன்மை விளையுமா? இவற்றில் உள்ள அம்சங்கள் இன்றைய இந்தியாவுக்கு தேவையானதுதானா? – ச.அன்புமலர், வேட்டவலம்

பதில் : நம் நாட்டு தேர்தல் சட்டங்கள் – முறைகளில் தீவிர அடிப்படை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் ஒழிய, எந்தப் பாலும் மாற்றத்தைக் கொண்டுவராது. சீசன் திருவிழா – வாணவேடிக்கையாகவே நடந்து முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *