திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் முருகேசன். பூட்டு செய்யும் தொழிலாளி. இவரது மகள் கோகிலா.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் 4-ஆம் முயற்சியில் தேர்ச்சி பெற்று தற்போது தென்காசி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
பூட்டுப் பட்டறைத் தொழிலாளியின் மகள் முதல் நிலை அலுவலர் நிலைக்கு வரமுடியும் என்பதை இவர் உறுதி செய்துள்ளார். தகுதி, திறமை, பரம்பரை என்று கூறி ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை மறுத்த ஆதிக்கவாதியினரின் கொள்கைகளை இவர் தகர்த்து சாதனை படைத்துள்ளார். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர், அதுவும் பெண்ணாகப் பிறந்தவர் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளார். மற்றப் பெண்களுக்கு இவர் ஓர் எடுத்துக்காட்டானவர்.