Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பக்தியின் பலன்

சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 6 அன்று நடந்தது. பக்திப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடியபடி லட்சுமியை தரிசித்துக் கொண்டிருந்தபோது, 10 பெண்களின் 85 சவரன் தங்க நகைகளை திருடர்கள் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம்.பாவம் போக்க வந்த இடத்தில் பவுனைப் பறிகொடுத்துள்ளனர் பக்தைகள். ஸ்ரீ லட்சுமி அம்மன் தனது பக்தைகளின்  உடைமைகளைக் காக்க எதுவும் செய்யவில்லையாம்.காவல் துறையினர்தான் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.