ஆய்வுக் கட்டுரை: புத்தம் பெரியாரியம் இந்துத்துவம்

2022 கட்டுரைகள் டிசம்பர் 1-15 2022

தஞ்சை பெ. மருதவாணன்
இந்துத்துவ மூலவர்கள்

1. இந்து மகாசபை மூலவரான மூஞ்சே என்பவர் வன்முறையில் நம்பிக்கையுள்ள ஓர் இந்துமத வெறியர். இந்து மகாசபையை எப்படி நடத்தவேண்டும் என்று இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியைக் கண்டு ராணுவ ஆலோசனை பெற்றவர். பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்துமத எதிரிகளைப் போராடி வீழ்த்த முடியும் என்று கூறியவர். இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது 1944இல் தந்தை பெரியாரைத் திருச்சியில் சந்தித்து (29.9.1944) உரையாடியதும் உண்டு.
2. “ஃபிரன்ட் லைன்’’ (Front Line) எனும் இதழில் 20.7.2018இல் வெளிவந்த கட்டுரையில் காணும் முதன்மையான பகுதிகள் வருமாறு:
இந்து மகாசபைத் தலைவர் மூஞ்சேதான் ஆர்.எஸ்.எஸ். தோற்றுநர் ஹெட்கேவரின் ஆசான். ஆர்.எஸ்.எஸ் என்பது மகாராஷ்டிராவைச் சேர்ந்த அய்ந்து பார்ப்பனர்களால் 1925இல்
தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்
பட்டதே காந்தியார் மீதும் அவரின் கொள்கையின் மீதும் கொண்ட பெருங்கோபத்தால்தான். பாசிசத்தின் (Fascism)தோற்றுநராகிய இத்தாலியின் முசோலினி, நாசிசத்தின் (Nazism) மூலவராகிய ஜெர்மனியின் இட்லர் ஆகியோரைப் பின்பற்றி ஒரு ராணுவ அமைப்பைப்போல் இந்துக்களைத் தயார் செய்வதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம். ஏற்கெனவே இந்து மகாசபை இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். தோன்றியதன் நோக்கமே காந்தியார் கொள்கைகளின் மீதிருந்த கோபமே ஆகும். (தமிழாக்கம்: த.க.பாலகிருஷ்ணன் ‘விடுதலை’ 2.8.2018)
3. 1923இல் இந்துத்துவா என்ற சொல்
லாடலை உருவாக்கிய சாவர்க்கர் வன்முறையில் நம்பிக்கையுள்ள இந்துமத வெறியர். “இராணு
வத்தை இந்துமயமாக்கு! இந்துக்களை இராணுவப் படையாக்கு’’ என்பது இவரின் கொள்கை (Hinduise the Military and Militarise the Hindus) இந்துத்துவா என்பது ஒரு மதக்கோட்பாடு என்பதைவிட ஓர் அரசியல் கோட்பாடு என்பது இவரது கருத்து. அரசியல் முன்னேற்றத்துக்குப் பாலியல் வன்முறையைப் பயன்படுத்தலாம் என்பதும் இவரது விபரீதக் கோட்பாடு. “இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற ஆறு சகாப்தங்கள்’’ என்ற தனது நூலில் பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தியிருக்கிறார்.
(தி ஃபிரன்ட் லைன் 11.5.2018. ‘விடுதலை’ 15.5.2018)
4. இறைச்சியைத் தவிர்க்கும் முட்டாள்களால் வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராட முடியாமல் போகும். இறைச்சி சாப்பிட்டு நல்ல முறையில் உடல்நலம் பெற்றிருந்தால்தான் ஆங்கிலேயனை நாட்டைவிட்டு விரட்ட முடியும் என்பது சாவர்க்கரின் கூற்று.(Vinayaga Damodar Savarkar Dates of time spent in Britain 3rd July 1908/ Ist July 1910. ‘விடுதலை’ 4.10.2017)
5. காந்தியைக் கொன்ற மராத்தியப் பார்ப்பான் கோட்சேயின் குருநாதர்தான் இந்த
சாவர்க்கர். கோட்சே சாவர்க்கரிடம் பொருளுதவி மற்றும் ஆயுத உதவி பெற்று டில்லி சென்று பிர்லா கோயில் வளாகத்தில் அனைத்து மதப் பிரார்த்தனைக்குச் சென்று கொண்டிருந்த காந்தியாரைச் சுட்டுக் கொன்றான். காந்தியார் கொலையில் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர் நீதிமன்றத் தீர்ப்பின்
காரணமாக விடுவிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தார். அந்தமான் சிறையில் இருந்தபோது
ஆங்கில அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி பல மன்னிப்புக் கடிதங்களை எழுதி, தன்னை விடுவிக்கும்படி வேண்டிய “வீரர்’’தான் அந்த வீரசாவர்க்கர். இவரது
இகழார்ந்த இத்தகைய நடவடிக்கைகள் எவையும் இவரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறப்பதற்குத் தடையாக இருக்கவில்லை என்பது எப்படி வியப்புக்குரியதோ அப்படியே இவர் ஒரு நாத்திகர் என்பதும் கூட வியப்புக்குரியதே!

சிறுபான்மையினர் உரிமைக்கு எதிரான சீரழிவுக் கொள்கை
உலக நாடுகள் அவை 1948இல் வெளியிட்ட மனித உரிமைச் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சிறுபான்மையினர் உரிமை பற்றிய பிரிவில் காணப்படும் கொள்கைகளுக்கு எதிராக அவர்களை வெறுத்தொதுக்கும் விபரீதக் கொள்கையை வெளிக்காட்டிக் கொள்வதில் இந்துத்துவாக்களுக்கு வெட்கம் என்பதே இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் கோல்வால்கர் தனது ‘நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’ (we or our Nation hood defined) எனும் நூலில் கூறியிருப்பதாவது:
1. இந்துராஷ்டிரம் அமையும் போது அந்நியர்களாக இருப்பவர்களுக்கு (அதாவது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு) இரு மார்க்கங்கள் தான் வெளிப்படையாக உண்டு.
2. ஒன்று, அவர்கள் (இந்து) தேசிய இனத்
துடன் முழுமையாக இணைந்து இந்துக் கலாச்
சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மேற்படி தேசியம் அனுமதிக்கும் வரையில் அதாவது நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லும் வரையில் அவர்களது கருணையின்கீழ் வாழ்ந்துகொள்ள வேண்டும்.
3. இந்துஸ்தானத்தில் உள்ள அந்நிய இனங்கள் இந்துக் கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
4. இந்துமதத்தை மதித்திடவும் பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும்.
5. இந்த இனத்தையும் கலாச்சாரத்தையும் அதாவது இந்து தேசத்தை வானளவாகப் புகழ்வதைத் தவிர வேறு எந்த சிந்தனையையும் ஏற்காதிருக்கவேண்டும்.
6. தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்
களைத் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்து விடவேண்டும் அல்லது எதையும் கேளாமல் முன்னுரிமைகள் சலுகைகள் எதையும்
கோராமல் ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக் கூடக் கோராமல் இந்து தேசத்திற்கு முழுமை
யாகக் கீழ்ப்படிந்து இருந்துகொண்டு நாட்டில் தங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக் கூடாது.
(பக்கங்கள் 47-48) (“விடுதலை’’ 5.10.2018)
மனுதர்மம் ஓர் இந்துத்துவ வழிகாட்டி நூல்
உலகின் மிகக்கொடிய மனித உரிமை மறுப்பு நூலாகிய மனு (அ) தர்மம் என்பது ஆரிய இந்துத்துவாக்களுக்கு வழிகாட்டி நூல்! எவ்வளவு உயர்நிலை வகிக்கும் பார்ப்பனர்களாயினும் ஒன்று. அந்நூலைப் போற்றுவர் அல்லது குறைந்த பட்சம் கண்டிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பர். கள்ளமனமின்றிக் கண்டிக்கும் உண்மைப் பார்ப்பனர் உள்ளனரா என்னும் தேடல் முயற்சி வெற்றியைத் தழுவுவது முயற்கொம்பே! கொடூரமான பொய்கள் அடிக்கடி மவுனத்தினாலேயே சொல்லப்படுகின்றன என்பது ஓர் ஆங்கிலப் பயன்மொழி! (The Cruellest lies are often told in silent) இனி மனுதர்மத்தை வரவேற்கும் இந்துத்துவ “மகானுபாவர்’’களைப்பற்றி அறிவோம்.
1. சித்பவன் பார்ப்பனரான பாலகங்காதர திலகர் “நமது நாட்டிற்குச் சுயராஜ்யம் வந்தால் மனுதர்மமே அரசியல் சட்டமாக ஆகவேண்டும்’’ என்று கூறினார்.
(மகாராஷ்டிராவில் உள்ள ரோலத்மால் என்னும் இடத்தில் 9.1.1917 இல் திலகர் ஆற்றிய உரை. “விடுதலை’’ 22.4.2015, பக்கம் 4)
2. ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கோல்வால்கர் 1935இல் எழுதிய நூலில் காணப்
படுவது இது: “உலகிலேயே முதன்மையானவரும் சிறந்த சட்டங்களை வழங்கியவருமான மனுவான
வர் (மனுஸ்மிருதி) உலகில் உள்ள மக்களை
இந்நாட்டிலுள்ள மேதைகளாகிய பிராம்மணர்
களிடமிருந்து தங்கள் கடமைகளைக் கற்றுக்
கொள்ளுமாறு, தான் ஆக்கிய நியாய நூலில் பணிக்கிறார்.’’ (“விடுதலை’’ 22.4.2015, பக்கம் 4)
3. அரசமைப்புச்சட்ட நிர்ணய சபை அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய மூன்று நாள்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆங்கில ஏடான ஆர்கனைசரில் 30.11.1949இல் எழுதப்பட்ட தலையங்கத்தில் அரசமைப்புச் சட்டத்தை ஏற்காமல் மனுஸ்மிருதி மட்டுமே அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும் என்று கோரியது. பண்டைய பாரத நாட்டில் ஏற்பட்ட ஈடு இணையற்ற அரசமைப்புச் சட்ட முன்னேற்றங்கள் பற்றி நமது அரசியல் சட்டத்தில் எந்தக் குறிப்பும் காட்டப்படவில்லை. ஸ்பார்ட்டா நாட்டின் லிகர்கூஸ், அல்லது பெர்சிய நாட்டின் சாலமன் ஆகியோரின் காலத்துக்கு முன்பே ஏற்பட்ட மனுச்சட்டங்கள் உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்வதுடன் உடனடியாக அவற்றுக்குப் பணிந்து செயல்பட வைத்தது. ஆனால், நமது அரசமைப்புச் சட்டப் பண்டிதர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. ஆகவே இந்த அரசமைப்புச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. (‘விடுதலை’ 13.10.2018)
(தொடரும்)