கே: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை ஒத்தி வைத்துள்
ளார்களே! உள்நோக்கம் என்னவாயிருக்கும்?
– சாமிநாதன், திருச்சி.
ப: வெளியில் சொல்லப்படும் காரணம்; அதை வெளியில் நடத்திட அனுமதி-யாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தில், சுற்றிப் பாதுகாக்கப்பட்ட இடத்தில் நடத்திட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து
மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூற்று.
உண்மைகள் வேறு இருக்கலாம். ஏனெனில், அவர்கள் ‘Hidden Agenda’ என்ற மறைமுகத் திட்டங்களோடு செயல்படும் அமைப்பினர் என்ற உண்மை உலகறிந்ததாகும்.
கே: பத்து விழுக்காடு முற்பட்ட ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் வழங்கலா
மென்று உச்சநீதிமன்றத்திலே தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்அய்வரில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ இல்லை என்பது நீதிமன்றத்தின் நடு நிலையை அய்யுறச் செய்கிறதல்லவா?
– குமரவேல், திருத்தணி.
ப: பெரும்பகுதி உயர்ஜாதியினரின் ஆக்கிர-மிப்புதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை; என்றாலும், சிலரைக்கூட அந்த அய்வரில் போடாதது குறித்து முன்பே ஒரு ஆட்சேப மனு வந்து, அதனைத் தள்ளிவிட்டனர் -_ விளம்
பரப்படுத்தாமலேயே _ என்ற கூடுதல் தகவலையும் தெரிவிக்கிறோம்.
கே: உச்சநீதிமன்றம் முற்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஒன்பதுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்விற்கு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் இரு கோரிக்கைகள் எழுகையில் எது ஏற்புடையது?
– ஆறுமுகம், மதுரை
ப: சீராய்வுதான் சரியானது; ஒன்பது நீதிபதிகளோ அதற்குமேல் 11 நீதிபதி
களோ இந்த அரசியல் சட்ட அமர்வில் இடம்பெற்றால் நல்லதுதான். ஏனெனில், 9 நீதிபதிகள் கொண்ட மண்டல் கமிஷன் தீர்ப்புக்கு இது பல வகையில் மாறுபடுகிறது.
கே: இஸ்லாமியர் வாக்குகளை கணிசமாகப் பிரித்து பி.ஜே.பி.க்கு உதவும் ஓவைசிக்கு இஸ்லாமியர்கள் வாக்களிப்பதைத் தடுக்க, நாடெங்கும் உள்ள அம்மதத் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்?
– கோவிந்தசாமி, மதுரை
ப : அப்படிப்பட்டவர்களின் முகமூடியைக் கழற்றிக் காட்ட இஸ்லாமிய முற்
போக்காளர்கள் முன்வந்து
பணி செய்யவேண்டும்.
கே: இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடைய இரு நீதிபதிகள்; அதிலும் ஒருவர் ஆறு மாதத்திற்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதிபதியானவர். மிக முக்கியமான இடஒதுக்கீட்டு வழக்கை விசாரிக்க, இப்படிப்பட்டவர்களை அமர்த்தியது திட்டமிட்ட செயல்தானே? நீதிமன்ற மாண்புக்கு இது சரியா?
– வீராசாமி, திருச்சி
ப: சரியாக உச்சநீதிமன்றத்தின் போக்-கினை நாடு புரிந்துகொள்ளக் கூடிய
தாய் உங்கள் கேள்வி உள்ளது. நல்ல தகவல் கூறும் கேள்வியாதலால், பதிலும் அதுவே!
கே: வன்னியர் இடஒதுக்கீட்டிற்குப் புள்ளி விவரங்கள் கேட்ட உச்சநீதிமன்றம், பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டில் அடிப்படை விவரங்கள் எதையும் கேட்காமல் உயர் வகுப்பினருக்குச் சாதகமாய்த் தீர்ப்பு வழங்கியது எப்படி நீதியாகும்?
– மாணிக்கவேல், மதுராந்தகம்
ப: “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி _ சாத்திரம் சொல்லிடுமாயின் _ அது சாத்திரமல்ல _ சதியென்று கண்டோம்” என்பது (பார்ப்பன) பாரதியின் கவிதை. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வரும்போது புள்ளி விவரம் எங்கே என்று கேட்டவர்கள், உயர்ஜாதிக்கு தனி ஒதுக்கீடு -_ அதுபற்றி கவலைப்பட வேண்டாமா? மனு நீதி எப்படி இன்னும் ஆளுமை செய்கிறது பார்த்தீர்களா?
இது மாதிரி குறுக்குச் சால் ஓட்ட இடமில்லாமல், நிதானமாக அதைச் செய்யவேண்டும் என்பதால், தேர்த
லுக்கு அதை அவசர ஆயுதமாகப் பயன்படுத்தியதால், எண்ணியதால் நாம் அதன் வடிவத்தை அப்போது ஆதரிக்கவில்லை. தத்துவம் எப்போதும் நமது நிரந்தர ஆதரவுக்கானது -_ செய்வதை திருந்தச் செய்திருந்தால் ஓட்டை இல்லாமல் இருந்திருக்குமே! என்பதைச் சொன்ன நம்மை எதிரியாகக் கருதுகிற பக்குவ-மற்ற அரசியல் விளைவு அது.
கே: வாக்குகள்பிரியாமல் கெஜ்ரிவாலை, மதச்சார்பற்ற அணியில் சேர்க்க நம் முதல்வர் முயற்சி செய்வாரா? தங்கள் முயற்சியும், வழிகாட்டலும் கட்டாயம் என்பதே மக்கள் கருத்து. செய்வீர்களா?
– கோபால், புதுக்கோட்டை
ப: கெஜ்ரிவால் ஒரு டிரோஜன் குதிரை. இடஒதுக்கீடு -_ சமூகநீதி, மதச்சார் பின்மை செரிமானி. இவற்றை விழுங்கும் விஷப்பாம்பு _ பால் வார்க்கக்கூடாது. தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் கூறுவர், “வைதீகப் பார்ப்பானை-விட மோசம் லவுகீகப் பார்ப்பான்” என்று. அந்த
பின் வரிசை ஆள். இவர் ஒரு பதவிக்குறி உள்ள சந்தர்ப்பவாதி. எனவே, இவர்களை ஒருபோதும் நம்ப முடியாது. அவர் மற்றவர்களுக்குப் பயன்படுவதைவிட, மற்றவர்கள் தனக்குப்பயன்படுவார்களா என்ற இலக்குடையவர் _ புரிந்துகொள்ளுங்கள். இதுவே துவக்கம் முதலே நமது கருத்து!