உடலில் சேரும் நஞ்சு நீங்க…
சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள நஞ்சு வெளியேறும்.
அகத்திக்கீரை, தனியா, பனங்கற்கண்டு ஆகியவற்றை பாலில் போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், பாலை வடிகட்டி, சூடாகவோ அல்லது குளிரூட்டியோ பருகலாம்.
கற்பூரவள்ளி இலையுடன் வேப்பம் ஈர்க்கு சேர்த்து நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உருவாகும் நாக்குப் பூச்சிகள், மலத்துடன் வெளியேறி விடும்.
துவரம் பருப்பை வேக வைத்து, வடித்த நீரில் மிளகும், பூண்டும் தட்டிப்போட்டு ரசம் வைத்து சாப்பிடலாம்.
பாக்கைப் பொடித்து பாலில் கலந்து குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது நாக்குப் பூச்சி மற்றும் வயிற்றுப் பூச்சித் தொல்லையை நீக்கும்.
மஞ்சனத்தி (நுணா) இலை, சீரகம், சின்ன வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து அரைக்கவும். அதை வடிகட்டி சாற்றைக் குடிக்கலாம். இது செரிமானக் கோளாறைச் சரிசெய்து, உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும்.