சுயமரியாதை வீரரான சிவகங்கை ராமச்சந்திரனாரை காங்கிரசில் சேருமாறு சத்தியமூர்த்தி (அய்யர்) வலியுறுத்தியபோது, நீங்கள் பூணூலை அகற்றினால் காங்கிரசில் சேருகிறேன் என்று முகத்திலடித்தாற்போல் பதில் தந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
உணவுப் பஞ்சம்
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப இந்தியாவில் உணவு, தண்ணீர், ஆற்றல் ஆகியவற்றின் உற்பத்தி இல்லை. 2030ஆம் ஆண்டில் தற்போது உள்ளதைவிட அதிகமாக 50 சதவிகித உணவு, 30 சதவிகித தண்ணீர், 45 சதவிகித ஆற்றல் தேவைப்படும்.
2040ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 900 கோடியாக உயர வாய்ப்பு உள்ளது. அப்போதைய மக்கள் தொகைக்கேற்ப – தேவைக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இல்லையேல், சுமார் 300 கோடி மக்கள் வறுமை நிலையில் துன்பப்படுவார்கள் என்று அய்.நா.அறிக்கை எச்சரித்துள்ளது.