முனைவர் கடவூர் மணிமாறன்
திண்ணிய மனமும், மரபும்
தெளிந்தநல் லறிவும் மிக்கார்!
தொன்மொழி தமிழைக் காக்கும்
தொண்டறம் தோய்வார்; தமிழர்
நன்னெறி மரபை, மாண்பைப்
பொன்னெனப் போற்றிக் காப்பர்
மன்பதை உய்ய உயர
நாளுமே உழைப்போர் திராவிடர்!
ஆரியர் நஞ்சை நெஞ்சில்
அமிழ்தென ஏற்கும் தீயர்
வீரியம் இழந்த போதும்
வெந்துயர் இழைப்பர்: நம்மோர்
வேரினைப் பறிக்க எண்ணும்
வெஞ்சினம், கயமை மிக்கார்;
சீரினை அழிக்க எண்ணும்
சிறுமதி படைத்தோர் ஆவர்!
முடக்கிடுவர் நம் பகுத்தறிவை
முழுநெஞ்சும் வஞ்சம் மிக்கார்!
இடக்கினைச் செய்வ தற்கே
என்றுமே முனைப்பாய் நிற்பார்;
மடமையில் திளைப்பார்; வேண்டா
மதவெறிச் சழக்கால் மாற்றார்
தடத்தினை மறிப்பார்: மானம்
தகர்த்திட சூது செய்வார்!
பொய்யினை மெய்யே என்பார்!
புரட்டினை நம்பச் சொல்வார்!
மெய்யினைப் பொய்யே என்பார்!
மிரட்டியே அடக்கி ஆள்வார்!
உய்ந்திடும் வழிகள் சொல்லார்;
ஊக்கியே பகை வளர்ப்பார்
செய்திடும் சதி தகர்த்து
செருவினில் வெல்லும் திராவிடம்!