11.6.2022 முதல் 25.6.2022
11.6.22 ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு.
11.6.22 கேசினோ சூதாட்டப் புகாரால் புதுச்சேரிக்குச் செல்லாமல் திரும்பிய சொகுசுக் கப்பல்.
11.6.22 நூபுர் சர்மா கருத்துக்கு எதிர்ப்பு. டெல்லி, உ.பி.யில் முஸ்லிம்கள் போராட்டம்.
12.6.22 வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் திட்டம்- யுஜிசி அறிவுறுத்தல்.
12.6.22 இந்தியாவில் ஆன்மிக வளர்ச்சியும் அவசியம் – ஆளுநர் ரவி கருத்து.
12.6.22 உ.பி.யில் தெற்காசியாவின் பெரிய ராணுவ தளவாட வளாகம் – அதானி குழுமம் ஒப்பந்தம்.
13.6.22 சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் பேச்சு – டி.ஆர்.பாலு கண்டனம்.
13.6.22 சிதம்பரம் கோயில் நிருவாகம் குறித்து ஆலோசனை தெரிவிக்கலாம் – இந்து சமய அறநிலையத் துறை.
14.6.22 குழந்தைகள், மாணவர்களுக்கு கதைகள், பஜனைகளைக் கற்றுத்தர ஆன்லைன் வகுப்பு – இஸ்கான் ஏற்பாடு.
14.6.22 தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.
15.6.22 அக்னிபாதை திட்டத்தில் முப்படைகளில் 4 ஆண்டு சேவை அறிமுகம் – ராஜ்நாத்சிங்.
15.6.22 உ.பி.யில் புல்டோசர் இடிப்பு, மனித உரிமை மீறல் உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி முன்னாள் நீதிபதிகள் கடிதம்.
16.6.22 மருத்துவர்கள் கதர் வெள்ளை அங்கிகளை அணிய வேண்டும் – தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்.
17.6.22 மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் – முதல்வர் கடிதம்.
17.6.22 மேகேதாட்டு வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் – டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்.
18.6.22 ‘அக்னிபாத்’ எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது.
18.6.22 இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் பரிந்துரை.
18.6.22 விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி.
18.6.22 அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 135ஆம் இடம்.
19.6.22 மேகேதாட்டுவில் அணைகட்ட விடமாட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.
19.6.22 தேச நலனுக்கு எதிரான ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற முதல்வர் வேண்டுகோள்.
19.6.22 வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு – அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்.
20.6.22 திட்டமிட்டபடி ‘அக்னி’ வீரர்கள் தேர்வு – மத்திய அரசு உறுதி.
20.6.22 அக்னி வீரர்களுக்கு கட்சி அலுவலகத்தில் பாதுகாவலர் வேலை – பா.ஜ.க. தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா பேச்சு.
21.6.22 சென்னை அய்.அய்.டி.யில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்.
21.6.22 10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் கடும் சரிவு.
21.6.22 ஆயுதப் படையை உருவாக்க பாஜக முயற்சி – மம்தா
21.6.22 அக்னி வீரர்களுக்குப் பெரு நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு : தொழிலதிபர்கள் உறுதி.
22.6.22 பா.ஜனதா கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அதிகாரபூர்வ அறிவிப்பு.
22.6.22 தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்குப் பாதிப்பு – தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு.
22.6.22 குடியரசுத் தலைவர் தேர்தலில் 13 கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா.
23.6.22 தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டாம் கட்டமாக இலங்கைக்கு ரூ.67.70 கோடியில் அத்தியாவசியப் பொருள்கள் – தமிழ்நாடு அரசு அனுப்பியது.
23.6.22 அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு – சென்னை புறநகர் ரயில் நிலையம் முற்றுகை – மாணவர்கள் அதிரடியாகக் கைது.
24.6.22 மகாராஷ்டிர அரசுக்குத் தொடர்கிறது நெருக்கடி.
24.6.22 குடியரசுத் தலைவர் தேர்தலை 2ஆவது முறையாகத் தவறவிடும் ஜம்மு – காஷ்மீர்.
25.6.22 இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் 42 லட்சம் பேர் தப்பினர் ஆய்வில் தகவல்.
25.6.22 கோவில் பெயரில் நன்கொடை வசூல்: கார்த்திக் கோபிநாத் மீதான விசாரணைக்குத் தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு.
தொகுப்பு: சந்தோஷ்