- கல்வி வளர்ச்சியைத் தீவிரப்படுத்த அடிப்படைப் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை. பயன்பாட்டு அறிவு இருந்தால் மட்டும் போதாது. வேலைவாய்ப்பு தரும் கல்வியே இப்போதைய தேவை. அறிவாற்றல் என்பது சொத்தாக மாற்றப்பட வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம் மூலம் சமூக மாற்றத்தைச் சாதிக்க முடியும்.
க.திருவாசகம், துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகின்றன. பெண்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அவர்களின் கணவர்களின் சம்மதம் குறித்தும் கேட்கப்படுகிறது. சட்டம்கூட அவர்களுக்கு இணக்கமானதாக இல்லை.
நாகபூஷணம், மேனாள் துணைவேந்தர், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் - பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். உலக நாடுகள் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும். இதனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன், அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.
பராக் ஒபாமா, அதிபர், அமெரிக்கா
- சில நேரங்களில் வழக்கை விசாரிக்கும் போதும், தீர்ப்பு அளிக்கும் போதும் நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்துகளை, விருப்பு வெறுப்புகளை இந்தச் சமுதாயத்தின் மீது திணிக்கின்றனர். சட்டம் இயற்றுபவர்களின் அறிவுத்திறனைத் தாங்கள் தீர்மானிக்க முடியாது என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் உரிமை எனக்குக் கிடையாது. ஆனால், அரசியல் சட்டக்கொள்கைகளின் அடிப்படையில் எனது கடமையை ஆற்ற வேண்டும்.
கபாடியா, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் - கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றும் அரசியல் செய்கிறார் ஜெயலலிதா. அவரின் இந்தப் போக்குதான் மக்களை ஏமாற்றவும் செய்யும். மக்களை ஏமாற்றவும் அவர் தயங்க மாட்டார் என்பதால் மக்கள் இவரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
கார்த்திக், தலைவர், நாடாளும் மக்கள் கட்சி - ஜெயலலிதாவின் போக்கிலும், அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்ட பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும் எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.
வை.கோ, பொதுச் செயலாளர் ம.தி.மு.க.
கார்த்திக் |
கபாடியா |
பராக் ஒபாமா |
க.திருவாசகம் |