Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

பிறந்த நாள்: 3.6.1924

கலைஞர் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் அல்லர். கலைஞர் மொழியில் சொல்ல வேண்டுமானால் மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளக் கூடிய மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர்! சிகரத்தை எட்டினார் என்றால் அதற்குக் காரணம், மூடக்கருத்துகளை அதன் வேர்வரை சென்று அழிக்கும் கொள்கைக்குச் சொந்தக்காரரான அவரின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஆழமான அடிப்படை – உழைப்பு! உழைப்பு!! உழைப்பே!!!
– கி.வீரமணி