தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும் , அ.தி.மு.க. அணியின் வேதனைகளும்

ஏப்ரல் 01-15

5 ஆண்டுகளில் அடைமழைச் சாதனைகள்


ஃ    ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி; 1 கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்.

ஃ மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு;

ஃ    மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள்;

ஃ    22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;

ஃ    விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 2005-2006இல் 9 சதவிகிதம்; 2006-2007 கழக அரசில் 7 சதவிகிதம்; 2007-2008இல் 5 சதவிகிதம்; 2008-2009இல் 4 சதவிகிதம்; 2009-2010இல் பயிர்க்கடன் வட்டி ரத்து; 2006க்குப்பின் இதுவரை 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஃ    2005-2006இல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010-2011இல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; ஃ    மீண்டும் புதுப் பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு;

ஃ    பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006இல் 50 சதவிகித காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005-2006இல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில்; 2009-2010 ஆம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர்க் காப்பீடு செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் 9 லட்சத்து 643 ஆயிரம்  விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது;

ஃ    21 லட்சத்து 23 ஆயிரத்து 491 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 1012 கோடியே 78 லட்சத்து 79 ஆயிரத்து 420 ரூபாய் உதவித் தொகை;

ஃ    காமராஜர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் என பள்ளிகளில், கல்வி விழா;

ஃ    2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ, மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாள்களும் முட்டைகள்;  வாழைப் பழங்கள்;

ஃ    தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து. ஃ    பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010-2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.

ஃ    படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;

ஃ    ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்;

ஃ    ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.

ஃ    தொழிற்கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து. ஃ    சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 5 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்; ஃ    2006-க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பென்னாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்;

ஃ    மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;

ஃ    அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.

ஃ    பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமென சட்டம்;

ஃ    நூறாண்டுக் கனவை நனவாக்கிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு. ஃ    அருந்தமிழ்ச் சான்றோர் 134 பேரின் நூல்கள் நாட்டுடைமை; 9 கோடியே 85 லட்சம் ரூபாய்  பரிவுத் தொகை;

 

ஃ    நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1.9.2006 முதல் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006-க்குப்பின் புதிதாக 2000 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க  அனுமதிக்கப்பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்று உள்ளனர். இவர்களில், தற்போது 5 ஆயிரத்து 41 கலைஞர்கள் நிதியுதவி பெறுகின்றனர்.

ஃ    தமிழறிஞர்கள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 999 தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும், 15 ரூபாய் மருத்துவப் படியும், 528 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 1500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது.

ஃ    எல்லைக் காவலர்கள் 339 பேருக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப்படியும், 166 எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 2000 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது.

வேலை வாய்ப்புகள்

ஃ    அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 இலட்ச ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;

ஃ    1 லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்;

ஃ    ஏறத்தாழ 2 லட்சத்து 33 ஆயிரத்து 169 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 60 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு; 13 அரசாணைகள் வெளியிடப்பட்டு 41 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 13 தொழிற்சாலைகள் திறப்பு;

ஃ    4 லட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது;

ஃ    ஏறத்தாழ 5 லட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன; ஃ    புதுப்பிக்கத் தவறிய 2 லட்சத்து 70 ஆயிரம் இளைஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்துப் பயன்;

மாற்றுத் திறனாளிகளுக்கு

ஃ    ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம்  200 ரூபாய் என்பது 1.9.2006 இல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500 ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 22 லட்சத்து 26 ஆயிரத்து 850 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெறுகின்றனர்.

ஃ    கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும்  10 ஆயிரம் கடும் மாற்றுத் திறனாளிகள் பயன்;

ஃ    1989இல் தருமபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின்மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய்.

ஃ    2006-க்குப்பின் 26 லட்சத்து 94 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு; 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஃ    மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே 2006-க்குப்பின் 19 ஆயிரத்து 885 இளைஞர் சுயஉதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புர சுயஉதவிக் குழுக்களும், 11 ஆயிரத்து 155 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

ஃ    சுய உதவிக் குழு உறுப்பினர்களாகிய 56,748 இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஃ    2,549 கோடி ரூபாய் செலவில் 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்;

ஃ    அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித்  திட்டத்தின்கீழ் 210 கோடி ரூபாய் செலவில் 420 பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள்;
நடப்பு ஆண்டில் 141 பேரூராட்சிகளில் 70 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்புப் பணிகள்; நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன;

ஃ    மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;

ஃ    உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு 2006-2007இல் 8 விழுக்காடு; அதாவது 2112 கோடி ரூபாய்; 2007-2008இல் 9  விழுக்காடு; அதாவது 2734 கோடி ரூபாய்; 2008-2009இல் 9 விழுக்காடு; அதாவது 2959 கோடி ரூபாய்; 2009-2010இல் 9.5 விழுக்காடு; அதாவது 3316 கோடி ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட்டு, 2010-2011இல் 10 விழுக்காடு; அதாவது 4030 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

ஃ    12 ஆயிரத்து 94 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரத்து  787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப்பட்டன;

ஃ    4 ஆயிரத்து 730கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப் படுத்தப்பட்டுள்ளன;

ஃ    தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன; ஃ    தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளன;

ஃ    தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை;

ஃ    ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

ஃ    அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;

ஃ    தருமபுரி மாவட்டத்தில் அரூர்-புதிய கோட்டம்;   காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம்; திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை புதிய கோட்டம்  என மூன்று புதிய கோட்டங்கள்.

ஃ    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்; திருவள்ளுர் மாவட்டம் மாதவரம்; கரூர் மாவட்டம் தரகம்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு கடவூர்; கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி;   வேலூர் மாவட்டம் ஆம்பூர்;  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்;  காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என 9 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஃ கட்டணம் உயர்த்தப்படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 3000 புதிய பேருந்துகள்;

ஃ    சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு ஜாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஃ    அனைத்து ஜாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும்  95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் உருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவபுரங்களில் இதுவரை 35 சமத்துவபுரங்கள் திறப்பு; 60 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன.

ஃ    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத்திட இதுவரை 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு;  புதிய சட்டமன்ற – தலைமைச் செயலக வளாகம் திறந்து சாதனை; ஃ    100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்கா திட்டம்;

ஃ    சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான செம்மொழிப் பூங்கா 24.11.2010இல் திறப்பு;

தாகம் தீர்க்கும் தாய்

ஃ    சென்னை மாநகர் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு, 31.7.2010 இல் திறப்பு; ஃ    மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்;

ஃ    ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன;

ஃ    1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; ஃ    630 கோடி ரூபாய் செலவில், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;

ஃ    மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்;

ஃ    369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்;

ஃ    மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பறக்கும் சாலைத் திட்டம்; ஃ    மத சுதந்திரம் பேண – கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;

ஃ    மூன்றாவது காவல் ஆணையம் மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை;

ஃ    2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்; ஃ    டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்குப் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஃ    இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஃ    ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை 1.8.2010 முதல் நடைமுறை;

ஃ    ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 லட்சம் ஆசிரியர்கள் பயன்.

ஃ    அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக 1.10.2010 முதல் உயர்த்தி வழங்கிட ஆணை;

பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.

தமிழக அரசைப் பின்பற்றி, மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள் (12.8.2010). தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களுக்கும் அனைத்துப் பொருள்களும் தட்டுப்பாடு இல்லாமலும் தங்கு தடையின்றியும் கிடைக்கப்பெற்று வருகிறது.

சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்களின் நலன் கருதி தலைவர் கலைஞர் அரசு பொது விநியோகத் திட்டத்தில் கடைப்பிடித்து வரும் பல முன்னுதாரண நடவடிக்கைகளே இவ்வெற்றிக்குக் காரணம் எனில் அது மிகையல்ல.

அதன் சிறப்புகளை தி இந்து போன்ற அகில இந்திய ஏடுகளெல்லாம் கூட பெரிய செய்திக் கட்டுரைகளே தீட்டி பாராட்டி வருகின்றன.

2007 மே மாதம் முதல், அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றுடன், சிறப்புப் பொது விநியோக முறையின் கீழ் கோதுமை, கோதுமைப் பொருள்கள், பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவற்றையும் தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு செய்யும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும்,

பொது விநியோக முறைப் பொருள்கள் திருப்பி விடப்படுவதைப் பற்றி தகவல்களைப் பெற, சென்னை உள்பட எல்லா மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

சோதனை அடிப்படையில், ரேஷன் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் இயக்கத்தைக் கண்டுபிடிக்க திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான வாகன இயக்க கண்காணிப்பு முறை அமலாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே கட்டம் கட்டமாக கிடங்குகளில் சரக்குப் போக்குவரத்து அனைத்தையும் ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள ஏதுவாக ஆன்லைன் கிடங்கு கண்காணிப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்றும்,

கிடங்குகளில் பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க நவீன விஞ்ஞான முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும்,

தமிழக பொது விநியோகத்திட்டம் குறித்து ஏடுகள் நடுநிலையோடு பாராட்டி வருகின்றன.

பொது விநியோகத் திட்டம் செம்மையுற நடைபெறுவதற்கு – அதனை கண்கொட்டாது முதல்வர் கலைஞர் அவர்கள் கண்காணித்து வருவதே முதன்மையான காரணம் எனின் அதனை மறுத்திடுவார் யாருமிலர்.

தமிழக பொது விநியோகத் திட்டத்திற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் உச்சநீதிமன்றமும் பாராட்டுத் தெரிவித்துள்ளது

அது விபரம் வருமாறு:

பொது விநியோகத் திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விவாதத்தின்போது பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில், பல லட்சம் டன் உணவுப் பொருள்கள் பாழானது பற்றி மனுதாரரின் வழக்குரைஞர் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்கள் பற்றி நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர், பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக நீதிபதிகள் பாராட்டினார்கள்.

தமிழக அரசைப் பின்பற்றி, மற்ற மாநிலங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே! என மத்திய அரசு வழக்குரைஞரிடம் கூறினார்கள்.

வீடுகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், தமிழக அரசைப் போல் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் உணவுப் பொருள்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாம் என்றும் யோசனை தெரிவித்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *