Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மாண்புரு மனிதர்கள்!

நூல்: மாண்புரு மனிதர்கள்

ஆசிரியர்: க.முருகேசன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018

தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935

நூலாசிரியர் துறையூர் க.முருகேசன் அவர்கள், சிறப்புக்குரிய _ பெருமைக்-குரிய உருப்பெற்ற மனிதர்-கள் என்பதைக் குறிக்கும் மாண்புரு (மாண்பு+உரு) மனிதர்கள் எனும் தலைப்-பிட்டு இந்நூலைப் படைத்-துள்ளது பாராட்டுக்குரியது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கருமவீரர் காமராசர் ஆகியோரை உள்வாங்கி அவர்தம் கொள்கை-களுக்கு மெருகூட்டி வலிமை சேர்த்து, ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்தோட்டத்துடன் மிகவும் எளிமையாகவும், படிக்கத் தொடங்கினால் முடிக்கும் வரை கண்களைப் பயணம் செய்ய வைக்கத்தக்க முறையிலே வி-றுவிறுப்பாகவும், இந்நூல் மாந்தர்களையும் மிகவும் சிறப்பாகவும் வழிநடத்திச் சென்றுள்ளதைப் பார்க்கும்-பொழுது நூலாசிரியரின் சமுதாயம் சார்ந்த புரட்சிகர எண்ணவோட்டங்கள் பளிச்சிடுகின்றன.

மதம், ஜாதி, கடவுள், தீண்டாமை ஆகியவற்றால் ஏற்படும் கீழ்நிலைகளையும், அவற்றினின்று விடுபட்டால் ஏற்படக்கூடிய மேல்நிலைகளையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

மேலும், ஜாதி மறுப்பு, மத மறுப்பு மணங்களுக்கு வலுவூட்டும் கருத்துகளை மனப்பாறையில் கல்வெட்டாகப் பதியுமாறு அருமையாகச் செதுக்கியுள்ளார்.

குறிப்பாக, முற்போக்குச் சிந்தனைகளை விதைத்து சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் உருவாக்கும் சிறந்த ஓர் அரிய படைப்பான இந்நூல் எல்லோருடைய கரங்களில் தவழுமாயின் அறியாமை, மூடநம்பிக்கை, அடிமைத்தளை இவை யாவும் ஒழிந்திடச் செய்யும் என்பதில் அய்யமில்லை.

– பெரு. இளங்கோ