சிந்தனை : பெரியாரை பெண்கள் தேர்வு செய்வது ஏன்

பிப்ரவரி 16-28,2022

மருத்துவர் ஷாலினி

ஒரு முக்கியமான உரையாடல்:

அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களைப் பற்றிப் பேசிக்கிட்டு எழுதிக்கிட்டு இருக்கீங்க? இதனால எல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்களா?’’ என்று என்னைக் கேலி செய்தார். அவருக்குத் தெரிந்த வேறொரு ஆண் மனநல மருத்துவரைப் பற்றிச் சொன்னார், “அவரு ஹிந்துத்வாவை ஆதரிக்கிறாரு. முஸ்லிம் நடத்துற கடையில நாம சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுறாரு. நீங்களும் தான் ‘சைக்கியாஸ்ட்’, நீங்க முஸ்லிம்களுக்கு ‘சப்போர்ட்’ பண்ணுறீங்க. ஒண்ணும் புரியல!’’ என்றார்.

நான் சொன்னேன், “1925இ-ல் இரண்டு பெரிய இயக்கங்கள் உருவாயின. ஒன்று ஒரு டாக்டர் உருவாக்கியது. சாதா டாக்டர் இல்லை, பிரிட்டிஷ் முறைப்படி படித்து இங்கிலிஷ் மெடிசன் பட்டம் வாங்கிய டாக்டர் ஆரம்பித்த இயக்கம் ஒன்று; அதிகம் படிக்காத ஒரு சாமானியன் ஆரம்பித்த இயக்கம் இன்றொன்று.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், இந்து ராஜ்யம், இந்து மேலாதிக்கம் பேசியது. பாமரன் ஆரம்பித்த இயக்கம், “அறிவு விடுதலையே எங்கள் குறிக்கோள்’’ என்றது.

இதற்கு பல தசாப்தங்களுக்கு பிறகு நான் பிறந்தேன். என் அம்மா ஒரு பக்திப் பழம். எங்கள் வீட்டில் அரசியல், சமூகம் மாதிரி பெரிதா யாரும் பேசியதில்லை. ஒரு ‘கிளீன் ஸ்லேட்’ மனதுடன் இருக்கும் எனக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள்:

1) டாக்டர் ஆரம்பித்த இயக்கம், தொடந்து பரவி, பள்ளிப் பருவம் முதல் மாணவர்களை  cultivate செய்து இயக்கத்திற்கு உட்படுத்தியது.

2) பாமரன் ஆரம்பித்த இயக்கம், யாரையும் இயக்க ரீதியாய் cultivate செய்யாமல் மானாவாரியாய் விட்டது.

இந்த இரண்டில் நான் எதைத் தேர்வு செய்வது? யார் ஆரம்பித்த இயக்கம் என்பதை விட, ஒரு பெண்ணாய், எனக்கு எது survival க்கு fit-ஆன இயக்கம் என்று நான் கூட்டிக் கழித்துப் பார்க்கிறேன்.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், மத அடிப்படைவாதம் பேசுகிறது.

*              இவர்கள் தான் பிளேக் நோயை ஒழிக்க எலிகளை அழிக்க வேண்டும் என்ற போது, எலி விநாயகரின் வாகனம், அதை கொல்லக்கூடாது என்று மருத்துவர்களைத் தடுத்து, சில மில்லியன் மனிதர்களைக் காவு கொடுத்தார்கள்!

*              இவர்கள்தான் ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறுவதை ஆதரித்தவர்கள்

*              இவர்கள்தான் பாலிய விவாக தடைச் சட்டத்தை எதிர்த்தவர்கள்

*              இவர்கள்தான் தேவதாசி முறையை ஆதரித்தவர்கள்

*             இவர்கள்தான் பெண்ணின் சொத்துரிமையை எதிர்த்தவர்கள்

*             இவர்கள்தான் பெண்ணுக்கு வங்கிக் கணக்கு கூட இருக்கக் கூடாது என்றவர்கள்

*             இவர்கள்தான் ஆணுக்குப் பெண் அடங்கிப் போவதே தர்மம் என்றவர்கள்!!

இதற்கு நேரெதிராய் அந்தச் சாமானியன் ஆரம்பித்த இயக்கம், பெண்ணை ஒரு சரிநிகர் சமானமான பிரஜை என்கிறது. பெண்-களுக்கான எல்லா உரிமைக்காகவும் போராடியது. விதவை மறுமணம், கல்வி உரிமை, சொத்துரிமை. பெண்களுக்கான கல்விக் கூடம், அபலை இல்லம், அனாதை ஆசிரமம் என்று women friendly-யான அனைத்து அம்சங்-களையும் கொண்டுள்ளது.

இது இப்படி இருக்க, கொஞ்சமாவது அறிவிருக்கும் பெண் இந்த இரண்டு இயக்கத்தில் எதைத் தேர்வு செய்வாள்?

டாக்டர் ஹெட்கேவார் ஆரம்பித்த பிற்போக்கான ஆர்.எஸ்.எஸ் எனும் பெண்ணடிமை அமைப்பையா? அல்லது பெரியார் எனும் பெண்ணியவாதி ஆரம்பித்த முற்போக்கான சுயமரியாதை அமைப்பையா?

நான் இவ்வளவு பேசியதும் அந்த லேடி எழுந்து என் கையைக் குலுக்கி, “இதைப் பற்றி இனிமே நானும் பேசுறேன்’’ என்றார்.

அது!!!

நன்றி : ஃபேஸ்புக்கில் – மனநல மருத்துவர் ஷாலினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *