Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிறப்பு 5.11.1888

தமிழர்கள் தீபாவளி கொண்டாட லாமா? தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு உரியதாகத் தோன்ற வில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்ப தற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும், சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலில், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

தமிழ் அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழர் சமயம்’ எனும் நூல் பக்கம் – 62.

கா.சு.பிள்ளை பக்தர்தான் – சைவ மெய்யன்பர் தான். ஆனாலும், தீபாவளி கொண்டாடக் கூடாது என்கிறார்.