Skip to content
- அமைதி உங்களைத் தாமதமாக – ஆனால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
- நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருப்பதே.
- பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.
- அறிவாளிக்கு – இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது.
- கடவுள் எண்ணம் அறிவையே கொன்றுவிட்டது.
- பகுத்தறிவைக் கொண்டு ஆய்ந்து, சரி என்று பட்டபடி நடவுங்கள்.
- கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை (கடவுள்) பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.
- மனிதனின் இறப்பு இயற்கை. பிறப்பு : அம்மா, அப்பா செயற்கை.
- மனிதனின் கடவுள் உணர்ச்சி மாறமாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.
- ஒழுக்கம் என்பது சொல்லுகிறபடி நடப்பதும், நடந்தபடி சொல்வதும் ஆகும்.
- நமது இழிநிலையை நீடிக்கும் மண்டபமே கோயில்கள்.
- கோயில்கள் அறிவு, பணம் இரண்டையும் இழக்குமிடம்.
- மக்களைத் தாழ்த்தவும், பார்ப்பனர் பணம் பறித்துப் பிழைக்கவும் ஏற்பட்டவையே கோயில்கள்.
- நமக்கு வேண்டியதெல்லாம் கோயிலல்ல. பள்ளிக்கூடம்தான்.
- அறிவுள்ளவர்க்கு அறிவின் செயல். அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்.
- மனிதனை முட்டாளாக்கும், பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும்.
- சூத்திரப்பட்டத்தின் மூலம் நாம் என்றும் அடிமையாக இருக்கும்படி பார்ப்பனர் செய்த தந்திரமே மதம்.
- கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக்காரனாகவும்கூட ஆக்கிவிடும்.
- பெண்களைக் கூண்டுக்கிளி ஆக்காமல் தாராளமாகப் பழகவிட வேண்டும்.
- தனி உடைமை ஒழிந்துவிட்டால் வாரிசு உரிமை என்ற பிரச்சினைக்கே இடமில்லை.