பதிவுகள்

டிசம்பர் 16-31
  • மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நவம்பர் 29அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
  • ராஜீவ் காந்தி கொலைவழக்கில்  தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு கருத்துக் கூற  ஒன்றும் இல்லை என்று அரசு சார்பில் கூடுதல் பதில் மனு நவம்பர் 30 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் புதிய மனு டிசம்பர் 1 அன்றும், பாதுகாக்கக் கோரியும்  மத்திய பாதுகாப்புப்படை வீரர்களை நியமிக்க வலியுறுத்தியும் டிசம்பர் 5 அன்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • ஆயிரம் கிலோ எடையுள்ள அணுகுண்டுகளைச் சுமந்து செல்லும் அக்னி_1 ஒடிசாவில் டிசம்பர் 1 அன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
  • டிசம்பர் 4 அன்று நடைபெற்ற ரஷ்ய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர்  விளாடிமிர் புதின் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
  • ஆந்திர மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டிசம்பர் 6 அன்று கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *