Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

பைக்ல போகும்போது கூட பெண்கள் ஆண்களை முந்திக்கொண்டு போகக்கூடாது என்று சட்டம் இருக்கா என்ன? என் வண்டியில பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு வந்த நண்பர் கேட்கிறார்: அங்க பாருங்க அவுங்க பெப்ட் வச்சுக்கிட்டு எப்படி உங்களை முந்திக்கிட்டு ஸ்பீடா போறாங்க… நீங்க சிஙிஞீ வித்துட்டு வேலையப் பாருங்க என்று நக்கல் அடிக்கிறார்…… இப்படி பெண்களை தன்னைவிட தகுதி குறைந்தவர்களாகவே பார்க்கும் ஆண் சமூகம் எப்படி அவர்களுக்குச் சமஉரிமை கொடுக்கும்?

பரணீதரன் கலியபெருமாள் டிசம்பர் 7, 2011  இரவு 9:24 மணி

இந்திய தேச ஒருமைப்பாட்டைப் புகட்ட அம்பானி, டாடா… இவர்களுக்குப் பிறகு அமெரிக்க வால்மார்ட் சொல்லச் சொல்வார்… அமாரே பாரத்…. இந்தியா….

மணிவர்மா டிசம்பர் 7, 2011  இரவு 8:29 மணி

 

முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கேரள அரசு, தென்தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்ற நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கி, வடதமிழகத்தை மேலும் பாலைவனமாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. வாழிய பாரத மணித்திருநாடு பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்
கோவி.லெனின் டிசம்பர் 8, 2011  காலை 8:52 மணி

ஆடும் நரியும் சண்டையிடுகிறபோது, நான் ‘நடுநிலை’ வகிக்கிறேன் என்று யாராவது சொன்னால் அவர்கள் உண்மையில் நரிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றே பொருள்!

எழிலரசன் டிசம்பர் 7, 2011  மாலை 4:03 மணி

இதுவரைக்கும் பீர் வாங்கத்தான் பாண்டிச்சேரி போனேன், இனிமே பால் வாங்கவும் அங்கதான் போகணும் போல….

அன்பழகன் வீரப்பன் நவம்பர் 17, 2011  இரவு 10:20 மணி

கூடங்குளம் அணு உலையை கலைஞர் கட்டியிருந்தா இவ்ளோ கஷ்டப்பட்டு பட்டினி கிடந்து போராட வேண்டியிருந்திருக்காது! அம்மாவே ஆஸ்பிட்டலாக்கிருப்பாங்கல்ல… துன்பத்திலும் ஒரு இன்பம்.

அதிஷா வினோ, நவம்பர் 10, 2011  மதியம் 12:17 மணி

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சட்டப்படி  குழந்தை முதல் முதியவர் வரை பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளான பாலை வீணாக்குவதைத் தடுக்கும்வண்ணம்…..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பாலாபிஷேகம் செய்வது தடை செய்யப்பட்டால்….

பாலின் விலை வெகுவாக குறையும்.

கடவுள் சிலையைத் தண்ணீரால் கழுவினால் போதாதா? பாலில் கழுவும் அளவிற்குத் தமிழகத்தில் பொருளாதாரநிலை வளமாக உள்ளதா?

அப்படி வளமான பொருளாதாரம் இருந்தால், விலையேற்றம் எதற்கு?

பொதுமக்கள் முக்கியமா? கடவுள் சிலையைப் பாலில் கழுவுவது முக்கியமா?

எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாலை வீணாக்கும் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

திராவிட புரட்சி நவம்பர் 17, 2011  இரவு 8:02 மணி