புதையல் :
மகாத்மாவின் வாயடைத்த குரு
ஒருமுறை காந்தி கேரளா சென்றிருந்தபோது அம்மண்ணில் தோன்றிய மாமனிதர் நாராயண குருவைச் சந்தித்தார். அப்போது காந்தி, ‘குருவே! நீங்கள் அமர்ந்திருக்கிற இந்த மாந்தோப்பில் எத்தனையோ மாமரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மர இலையும் வெளிர் பச்சை, அடர் பச்சை என்று மாற்றங்களோடு உள்ளதே? சமுதாயத்திலும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தானே செய்யும்? என்று கேட்டாராம்.
அதற்கு நாராயண குரு, நிறத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், எல்லா மரத்தின் இலைகளையும் பிழிந்து சுவைத்தால் சுவை ஒன்றாகத்தான் இருக்கும் என்று பதில் சொன்னாராம். அதோடு மகாத்மா விவாதத்தை நிறுத்திக் கொண்டாராம்.