பெரியாரை அறிவோமா?

டிசம்பர் 16-31

1. சேலத்தில்  ராஜகோபாலாச்சாரியாரும் ஈரோட்டில் ஈ.வெ. ராமசாமியும் நகர் மன்றத் தலைவர்களாக இருந்தபோது, ஈரோட்டின் நிர்வாகத்தைக் கண்டு வியந்த ராஜகோபாலாச்சாரியார் பெரியாரிடம் கேட்ட உதவி யாது?

அ) நீங்களே சேலத்திற்கும் சேர்மனாக இருங்கள் என்றார் ஆ) உங்களுடைய சானிட்டரி இன்ஸ்பெக்டரை எங்களுக்குக் கொடுங்கள் என்றார்  இ) ஈரோட்டின் நிர்வாக அதிகாரியைச் சேலத்திற்கு மாற்றுங்கள் என்றார் ஈ) தாங்களே ஒரு வாரம் சேலத்தில் தங்கி நிர்வாகத்தைச் சீர்படுத்துங்கள் என்றார்.

2.    ஓர் உயிரைப் பட்டினிபோட்டுச் சாகடிப்பதைவிடக் கொடுமையானது எது என்று பெரியார் கூறினார்?

அ) ஒருவனுக்குக் கல்வி அறிவைக் கொடுக்காமலிருப்பது
ஆ) அனாதையாக வாழ்வது
இ) குழந்தைத் தொழிலாளர் முறை
ஈ) ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் பாதுகாப்பது

3.    1970 இல் பெரியாருக்குக் கொடுக்கப்பட்ட விருது

அ) பத்ம பூஷண் விருது ஆ) செவாலியர் விருது இ) யுனெஸ்கோ விருது ஈ) நோபல் பரிசு

4.    கள் தயாரிக்க உதவும் மரத்தை வெட்டச் சொன்ன காந்தியாரின் கட்டளையை ஏற்று ஒரே நாளில் பெரியார் வெட்டிச் சாய்த்த தென்னைமரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

அ) 40 ஆ) 400    இ) 500    ஈ) 1500

5.    ஒரு பார்ப்பனச் சிறுவன் பார்ப்பனரல்லாத சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாக தான் கேள்வியுற்றால்,  தாம் இதற்காகப் பத்து தினங்கள் பட்டினி கிடப்பேன் என்று பேசிய பச்சை வருணாசிரமவாதிப் பார்ப்பனர் யார்?

அ) எம்.கே. ஆச்சாரி, ஆ)சி. இராசகோபாலாச்சாரி இ) வ. வே. சு. அய்யர், ஈ) சத்தியமூர்த்தி அய்யர்

6.    அண்மைக் காலம் வரை இந்திய நாட்டை ஆண்ட அரசர்கள் எத்தன்மையராய் இருந்தனர்  என பெரியார் கூறுகிறார் ?

அ) ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுகிறவர்கள் ஆ) குடிமக்களைக் கொடுமைப்படுத்தியவர்கள் இ) பார்ப் பனருக்கு அடிமைகள் ஈ) குடிகளிடம் அதிக வரி வாங்கினர்

7.    . . . . . . . . என்றால், அறிவும் மடமையும் என்பது கருத்து, இயற்கையும், இயற்கைக்கு  மாறுபட்டதும் என்பது கருத்து ஆகும்.   பெரியாரின் இந்த வாசகத்தில் விடுபட்ட சொற்கள் யாவை?

அ) மனிதனும் மதமும் ஆ) விஞ்ஞானமும் அஞ்ஞானமும் இ) அமைதியும் போரும் ஈ) சமத்துவமும் ஏற்றத்தாழ்வும்

8.    கருப்புச் சட்டையைக் குறித்துப் பெரியார் கூறுவது யாது?

அ)அது ஒரு படையெடுப்பின் எண்ணமல்ல
ஆ)சமுதாயத்தில் இழிவுபடுத்தப் பட்டுள்ளோம் என்பதற்கு அறிகுறி; இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம்
இ) இழிவைப் போக்கப் போராடுகிறோம் என்பதற்கு அடையாளம்
ஈ) மேற்சொன்ன எல்லாமும்

9.    உணவுமுறை பற்றிய பெரியாரின் பொதுக் கருத்து யாது?

அ) இப்போது உள்ள முறையே தொடரலாம்
ஆ) சத்துள்ள எளிய உணவைப் போதிய அளவு எல்லாவகைப் பொருட்களில் இருந்தும் தயாரித்து வீணாக்காது உண்ண வேண்டும் இ) மேல்நாட்டு உணவுகளையே உட்கொள்ள வேண்டும் ஈ) இறைச்சி உணவே சிறந்தது

10. நல்ல குடும்பம் யாது என பெரியார் கூறுகிறார்?

அ) சுற்றத்தாருக்கு உதவுந் தன்மையது
ஆ) குடும்பத்தார் அனைவரும் பொதுத் தொண்டு செய்ய வேண்டும்
இ) வரவுக்கு மிஞ்சிய செலவு செய்யாமல் இருக்க வேண்டும்
ஈ) அரசியலை ஒதுக்க வேண்டும்.

 

பெரியாரை அறிவோமா விடைகள்

1. ஆ

2. ஈ

3. இ

4. இ

5. அ

6. இ

7. அ

8. ஈ

9. ஆ

10. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *