செய்தியும் சிந்தனையும்… சினாவின் சிறையில் சிவன்!

மே - 01-15 (2021)

 

செய்தி: உலகளவில் அதிக மாசுபட்ட முதல் 15 நகரங்களில் 13 இந்திய நகரங்கள் அடங்கும்.

சிந்தனை: ஏன் எனில் இங்கு புண்ணிய நதிகள் எனும் சாக்கடைகள் அதிகம்.

பா.ஜ.க.வா – கொக்கா?

செய்தி: கரோனாவுக்காக ‘மாஸ்க்’ அணிந்து முகத்தை மூடிக்கொண்டால், ‘பியூட்டி பார்லர்’ நடத்துபவர்கள் கதி என்னாகும்?

– அஸ்ஸாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ்

சிந்தனை: எல்லோரும் சோப்பைப் பயன்படுத்திக் கைகழுவ ஆரம்பித்தால் சோப் விலை ஏறிவிடும் என்று சொல்லாமல் விட்டாரே?

‘துக்ளக்’கின் வேத எதிர்ப்பு!

செய்தி: சனாதன தருமம் மதுவை எதிர்க்கிறது.

 – துக்ளக்

சிந்தனை: சோம பானம், சுரா பானம் குடித்து கும்மாளம் போட்ட சங்கதிகள் வேதங்களில் நிரம்பி வழிகின்றனவே… அவற்றை எல்லாம் எதிர்க்கும் அளவுக்குக் குருமூர்த்தி கும்பலுக்குத் தைரியம் வந்துவிட்டதா?

செய்தி: திருமாவளவன் எதிர்க்கப் போவது சனாதன தர்மத்தையா? மதுவையா?

– ‘துக்ளக்’ குருமூர்த்தி

சிந்தனை: சனாதனம் என்பதே பிறப்பால் பேதம் பேசும் – கண்மூடித்தனமாக உளறும் ஒரு வகைப் போதைதானே!

சீனாவின் கைதி சிவன்!

செய்தி: உலக அளவில் வலுவான இராணுவத்தைக் கொண்ட நாடாக சீனா இருக்கிறது.

– ‘துக்ளக்’ 21.4.2021

சிந்தனை: சிவனாரின் கயிலாயம் என்று கூறப்படும் பகுதியான கைலாஸ் மானஸரோவர் என்பது சீனாவின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது.

மிஞ்சினால் கெஞ்சுவார்கள்!

செய்தி: தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்கிற நம் கணிப்பு – நம் நடுநிலை;  தி.மு.க. ஆட்சிக்கு வருவது நல்லதல்ல என்று நாம் துணிவாகக் கூறுவது _ நமது உண்மையான கருத்து – கருத்தில் நடுநிலை.

– குருமூர்த்தி ‘துக்ளக்’

சிந்தனை: ஆட்சிக்கு வரும் தி.மு.க. இதனைப் புரிந்துகொண்டு செயல்படும்.

செய்தி: கேள்வி: நம் நாட்டில் மட்டும்தான் பிரதமரையும், முதல் அமைச்சரையும் தரக்குறைவாக விமர்சிக்க முடியும்?

பதில்: தி.மு.க. அமெரிக்காவில் இருந்தால் அமெரிக்க ஜனாதிபதியை இப்படித்தான் விமர்சிக்கும்.

– ‘துக்ளக்’ 21.4.2021

சிந்தனை: காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும்: அதுவும் செருப்படிபோல் விழவேண்டும்.

– அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் ராஜாஜி!

“இவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்று அன்று கண்டித்து எழுதினார் தந்தை பெரியார்’’

                                                     (‘விடுதலை’ 8.2.1963)

இந்த ராஜாஜி அமெரிக்காவில் இருந்திருந்தால் என்ன பேசி இருப்பார்?

பா.ஜ.க.வின் மேனாள் தேசிய செயலாளர் – காரைக்குடி பேர்வழி உயர்நீதிமன்றம் என்றால்… என்று பேசினாரே – இவரை வெளிநாட்டுக்கு அனுப்பினால், தமக்குப் பிடிக்காதவரை எத்தகைய வார்த்தைகளால் அர்ச்சிப்பார்?

இங்கே மனுநீதி !

செய்தி: நார்வே பிரதமருக்கு – கரோனா விதியை மீறியதற்காக ரூ.1,75,000 அபராதம் விதித்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை.

சிந்தனை: பட்டப்பகலில் பாபர் மசூதியை இடித்தவர்களுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் பதவிகள் எல்லாம் நம் நாட்டில் அளிக்கப்படவில்லையா?

– மயிலாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *