வாசகர் மடல்

ஏப்ரல் 1-15,2021

கடந்த மார்ச் 16_31 இதழின் முன் அட்டைப் படம் சனாதனவாதிகளை நிலைகுலைய வைத்திருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதியின் வக்கர புத்திக்கு பெண்கள்தான் புத்தி புகட்ட வேண்டும். கணவனுக்கு மனைவி சேவகம் செய்யத்தான் என்று யாராவது கூறிவிட்டால் பெண்கள் அவர்களை மத்தால் மொத்தி விட வேண்டும். பா.ஜ.க. என்பது உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்காகவே நடத்தப்படும்  நிறுவனம் என்று ஒரு பக்கக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

 ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ _ 1995இல் உ.பி. முதல்வர் செல்வி மாயாவதி அம்மையார் அவர்கள் தஞ்சை பெரியார் _ மணியம்மை பொறியியல் கல்லூரிக்கு வந்தபோது ரூ.10 லட்சம் வழங்கியது பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டதற்கும் ஆசிரியரின் அன்புக்குமானது.

இளைய தலைமுறையே இனிதே வருக தொடரில் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி அதில் ஒரு திருத்தமாக “அவர் தமக்கே உண்டு’’ என்ற இடத்திலுள்ள ‘தமக்கே’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அவர் ‘தடிக்கே’ என்று திருத்தி எழுத வைத்ததும் கண்ணதாசன் மறுக்காமல் திருத்தி எழுத அனுமதித்ததும், ஆசிரியரிடம் கொண்ட கொள்கைப் பிடிப்புக்கும் நற்சான்று.

வரலாற்றை (பாதுகாப்போம்) உண்மையை, கொள்கையை மதிப்போம்! அவர்கள் வழி செல்வோம்! கொள்கையைப் பரப்புவோம்! ஆசிரியருக்கும் உண்மைக்கும் வாழ்த்துகள்!

– மு.உலக நம்பி, வாழப்பாடி

 

வணக்கம். உண்மை மார்ச் 1_15, 2021 படித்தேன். அதில் 18.11.1946லேயே தந்தை பெரியார் அவர்கள் “விடுதலை’’ தலையங்கத்திலே போலிஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும் ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர் என எழுதி இருக்கிறார்.

புயல் சேதத்துக்காக தமிழ்நாடு அரசு கேட்ட தொகை ரூ.3,759 கோடியே 38 லட்சம். மத்திய அரசு கொடுத்ததோ ரூ.63 புள்ளி 14 கோடி மட்டுமே.

புரெவி புயல் சேதத்துக்காகக் கேட்கப்பட்ட தொகையோ ரூ.1,514 கோடி. மத்திய பா.ஜ.க. அரசு போட்ட பிச்சைக் காசோ ரூ.223 புள்ளி 77 கோடியாகும்.

இதை வைத்து என்னதான் செய்ய முடியும் மாநில அரசால்!

மத்திய அரசின் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற பல்கலைக்கழகங்கள் நிர்பந்தப்படுத்தப்படுகின்றன.

குடல்வால் அழற்சி பற்றி நன்கு அறிய முடிந்தது.

– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி – 624705

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *