Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பரப்பப்பட வேண்டிய ஆவணப்படம்

முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்டே முல்லைப் பெரியாறு அணை உடைந்து வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி மக்கள் இறப்பது போன்ற குறுந்தகடுகள் கடந்த ஆண்டில் கேரளா முழுவதும் பரப்பப்பட்டது. அண்மையில் சோகன் ராய் என்ற மலையாளப் பட இயக்குநர் டேம் 999 என்ற இந்தி, இங்கிலீஷ் படத்தையும் எடுத்து, அதில் அணை உடைந்து பெருஞ்சேதம் ஏற்படுவது போன்ற காட்சிகளை உருவாக்கி பீதியைப் பரப்புகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணை: பிரச்சினையும் தீர்வும் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளனர் தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கத்தினர். அணையின் வரலாறு, 999ஆண்டு ஒப்பந்தம் எதற்காக போன்ற சான்றுகளோடு, அணையின் கட்டுமானம், பாதுகாப்பு போன்ற அறிவியல் பூர்வமான செய்திகளும் இதில் இடம் பெற்றுள்ளது. கேரளாவிலிருந்து எழும்பும் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்த ஆவணப் படத்தில் தெளிவாக பதில் இருக்கிறது. இதைத் தமிழ் மக்களிடம் மட்டுமல்ல…குறிப்பாக கேரள மக்களிடம்தான் அவசியம் காட்ட வேண்டும் என்கிறார் மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.வீரப்பன்.

ஆக்கம்&இயக்கம்:

பொறியாளர் எஸ்.ஜெயராமன் B.E., M.E.

வெளியீடு: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.