103 வயதில் ஸ்கை டைவிங்!

பிப்ரவரி 01-15 2021

ஏறக்குறைய 14 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விமானம் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. ஓர் இடம் வந்ததும் அந்த விமானத்தின் வேகம் குறைக்கப்பட்டு, அதிலிருந்த சாளரங்கள் திறக்கப்பட்டன. அடுத்த நொடியில் பயிற்சியாளர் ஒருவரின் உதவியோடு ‘ஸ்கை டைவிங்’ அடித்தார் ஆல்பிரட்.

அவர் பூமியை நோக்கி கீழே வருவதை உற்சாகமாகக் கைதட்டி வரவேற்றனர் ஆல்பிரட்டின் உறவினர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கு வயது 103. உலகிலேயே அதிக வயதான ‘ஸ்கை டைவர்’ என்று ‘கின்னஸ்’ (தீரச் செயல் பதிவேடு) புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டார். 99 வயதில்தான் ஆல்பிரட்டுக்கு ‘ஸ்கை டைவிங்’ என இருப்பதே தெரியவந்தது.

தனது, 100வது வயதில் முதல்முறையாக ‘ஸ்கை டைவிங்’ அடித்து இணையத்தில் வைரலானார். அப்போது, ‘எனது பேரன்கள் கல்லூரியில் பட்டங்கள் வாங்கினால் அதைக் கொண்டாட ஸ்கை டைவிங் அடிப்பேன்…’’ என்று சூளுரை செய்திருந்தார். அண்மையில் அவரது பேரன்கள் பட்டம்  பெற்ற பின், கொடுத்த வாக்கைக் காப்பாற்றி சாதனையாளராகிவிட்டார் ஆல்பிரட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *