பத்து மாதங்களுக்கு முன்பாக குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை, தனிப்பிரிவில் வைத்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. என்ன இருந்தாலும், தாயின் கருப்பையில் இருக்கும் இயற்கையான இதம் வராது அல்லவா? இந்தக் குறையை ஓரளவு போக்கும் வகையில், குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இதம் அளிப்பதற்காக என்றே ஒரு தனிப்பட்ட முறையிலான ஹெட்போனை உருவாக்கி, அதன் மூலம் ஒருவகை மென்மையான இசையைக் கேட்க வைத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு இதம் அளிப்பதோடு, குழந்தைகளின் மூளை செயல்பாட்டில் இசையின் தாக்கம் பற்றி அறிவதற்கான ஆய்வுக்கும் இந்த ஹெட்போன் பயன்படுகிறது.