* நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும்.
இயங்கினால்தான் மூளை; இன்றேல் அது வெறும் ஈளை.
* தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது ‘கற்பதால்’ வரும் அறிவு; வெறும் ‘படிப்பால்’ பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம், கற்பது வேறு; படிப்பது வேறு.
* நம்முள்ளே உள்ள ஓர் எதிரிப் பட்டாளத்தில் முன் வரிசையில் உள்ள ஒரு முழு எதிரியின் பெயர்தான் திருவாளர் ‘சுயநலம்!’
– ஆசிரியர் கி.வீரமணி