– அறிஞர் அண்ணா
“நான் நெஞ்சில் உள்ளதைக் கூறுகிறேன். கள்ளங் கபடமில்லாமல் கூறுகிறேன். பேச்சுக்குக் கூறவில்லை. எந்தப் பலனையும் எதிர்பார்த்துக் கூறவில்லை மற்ற கட்சியிலுள்ள எல்லோரையும் மதிக்கிறேன். மரியாதைக் குறைவான எண்ணம் எனக்கு ஒரு துளியும் கிடையாது.
நான் எளிய ஏழைக் குடியில் பிறந்தவன். கல்லூரியில் நான் படிப்பேன் என்று ஜோஸ்யம் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தவன். அதையெல்லாம் மறந்து விட்டு இன்று வந்த பதவியினால் தலைகனத்துப் போய் 50 வருடமாக நான் பயின்ற பண்பாட்டை இழக்கச் சம்மதிக்கமாட்டேன்.
பதவி இன்று வரலாம் நாளை போகலாம் ஆனால் பண்பாட்டைப் பெறுவது கடினம். பெறமுடியாத பண்பாட்டைப் பெற்று அந்தப் பண்பாட்டை இழக்கும் பேதையாக ஒரு போதும் மாறமாட்டேன்.’’