(ஒரு நாடகத் தொடர்)
சிந்தனைச் சித்ரா
[தந்தை பெரியார் என்னும் புரட்சியாளரின் அறிவுப் புரட்சியினால், புத்தாக்கச் சிந்தனைகளுக்கு ஆளான பல, பழைய (மனு) அநீதிகள் – சட்டக் கொடுங்கோன்மைகள் மீது ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியாக வேண்டும் என்கிற உத்வேகம் பலரை மக்கள் மன்றத்திலிருந்து மனிதநேய நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது;
சாஸ்திர, புராண, இதிகாசங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளின்மீது மறு விசாரணைக்கான மனு, வழக்குரைஞர் புத்தியானந்தாவால் தாக்கல் செய்யப்பட்டு, மாண்பமை நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் அவர்களால் விசாரிக்கப்படுகிறது.]
நீதிமன்றம் – நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் உள்ளே வருகிறார். எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்.
சைலன்ஸ்…
அனைவரும் வணக்கம் கூறியவுடன்,
நீதிபதி: வழக்கைத் தொடரலாம் புத்தியானந்தர் அவர்களே…
புத்தியானந்தர்: எஸ்.. மை லாட்…
இராமனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டதா? போய்ச் சேர்ந்ததா? விவரம் நீதிமன்றபதிவாளர்தான் கூறவேண்டும். அவரிடம் விவரம் அறிய விரும்புகிறோம்.
நீதிபதி: உடன்பதிவாளரை அழைத்துவரவும். சிலநிமிடங்களில் பதிவாளர் அங்குவந்து வணக்கம் தெரிவிக்கிறார்.
நீதிபதி: இராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவரம் தெரிவியுங்கள்.
பதிவாளர்: எஸ்.மை லாட்…
ஸ்ரீராமனுக்குச் சம்மன் அனுப்பி விஷ்ணு லோகத்துக்குச் சேர்ப்பிக்க முடியவில்லை. அப்படி ஒரு முகவரியுள்ள எவரும் இல்லையென்று (ழிஷீ ஷிuநீலீ கிபீபீக்ஷீமீssமீமீ)சம்மன் திரும்பிவந்துவிட்டது மை லாட்…
நீதிபதி: சரி நீங்கள் செல்லலாம்.
பதிவாளர்: எஸ்.மை லாட்…
பதிவாளர் செல்கிறார்.
நீதிபதி: சம்மன் சார்வு செய்யப்படாததாலும்; கொரோனா தொற்று அதிகரித்து ஊரடங்கு நடப்பில் உள்ளதாலும், நீதிமன்ற பணியாளர் சிலருக்கு தொற்று உள்ளதாலும், எங்களுக்கும்கூட இங்கே சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தையே மூடிவைத்து, கிருமி நாசினி தெளித்து சில நாட்களுக்கு பிறகு திறக்க உத்தரவிடுவது என்றவுடன் நீதிபதி வழக்கினை பிறகு எடுத்துக் கொள்ள உத்தரவிடுகிறார். நீதிமன்றத்தை மறுஉத்தரவு வரும் வரை மூடி, கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய உத்தரவிடுகிறேன்.மீண்டும் கோர்ட் திறக்கும்போது இவ்வழக்கு விசாரிக்கப்படும்.
(தொடரும்)