பிளாக் செயின் தொழில் நுட்பம்
பிளாக் செயின் தொழில்நுட்பம் என்பது வளர்ந்து வரும் ஓர் அறிவியல் துறையாகும். இது கிறிப்டோகிராபி என்பதை அடிப்படையாகக் கொண்டது. மறைவாக எழுதுவது, தகவல் தெரிவிப்பது என்பதே கிரிப்டோ கிராபியின் பொருள். கணிதம், கணினி, மின் பொறியியல், தகவல் தொடர்பு நுட்பம் மற்றும் இயற்பியல் ஆகியவற்றின் இணைப்பே நவீன கிரிப்டோகிராபி என்று சொல்லலாம். பிளாக் செயின் தொழில் நுட்பத்தில் அதிகரித்துக் கொண்டே போகும் ஆவணங்கள் கிறிப்டோகிராபியை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
பொதுப் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட பயன்பாடு என இரு விதத்திலும் இதைப் பயன்படுத்தலாம். இணைய பாதுகாப்பு வங்கி, இன்சூரன்ஸ் துறைகள், வணிக நிதி பரிமாற்றம் மற்றும் சில்லரை வர்த்தகம் ஆகிய துறைகளில் இப்போதுள்ள வரிமுறைகளை முற்றிலும் மாற்றும் வல்லமை கொண்டது என்று சொல்லப்படுகிறது. பரிமாற்றங்கள் விரைவாகவும் வெளிப்படை யாகவும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்தியாவில் பிளாக் செயின் தொழில் நுட்பம் ஒரு முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் துறையாகும். கேரளா அரசாங்கம் 20,000 பிளாக் செயின் வல்லுநர்களை இரண்டு வருடங்களில் உண்டாக்க உள்ளது.
ஆண்களுக்கு
புதிய முறை கருத்தடை!
உலகில் முதன்முதலாக ஆண்களுக்கு கருத்தடை மருந்தை ஊசி மூலம் செலுத்தும் சோதனைகளை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. RISUG எனப்படும் இந்த மருந்து 13 வருடங்கள் வரை சக்தியுடையதாக இருக்குமாம். 303 பேர் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 97.3% வெற்றி கிடைத்துள்ளது என்றும் பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அங்கீகாரத்திற்காக இந்த மருந்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.