பிள்ளையின் பிறந்த நாள், திருமண நாள் என்றில்லாமல், எல்லா நாட்களிலும், ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு நிறத்தில் நக பாலிஷ் போட்டு அழகு பார்க்காத பெற்றோர் உண்டா? விரல்களை அழகூட்ட மருதாணியைப் பயன்படுத்தியது சென்ற தலைமுறை; நக பாலிஷை பயன்படுத்துகிறது இன்றைய தலைமுறை. இதுபோல் தலைமுடியைச் சுத்தம் செய்ய சீயக்காயை பயன்படுத்தியது சென்ற தலைமுறை; ஷாம்பூவை பயன்படுத்துகிறது இன்றைய தலைமுறை.
நக பாலிஷில் ‘தாலேட்’ எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகப்படுத்தி விடுகிறது. இதன் விளைவால் சிறு வயதிலிருந்தே தினமும் நக பாலிஷ் போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் தொடங்கி விடுகிறது; மாதவிடாய் முடிவின்போது மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
ஷாம்பூவிலும் கண்டிஷனரிலும் தாலேட் 70% உள்ளது. ஷாம்பூ கொகொழப்பாக இருக்கவும், அதன் அடர்த்தியை அதிகரிக்கவும், அதன் நிறம் நம் கண்களைக் கவரவும் தாலேட்டைச் சேர்க்கின்றனர்.
தாலேட் தரும் நிறங்களுக்கும் வாசனைக்கும் மயங்காதவர்கள் நம்மிடம் இல்லை. அது கலந்துள்ள பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அதன் நச்சுத் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து, உடலில் சுரக்கும் ஹார்மோன் சுரப்பிகளுக்கு இடைஞ்சல் தருகிறது. இதன் விளைவாக தைராய்டு புற்றுநோய், பிராஸ்டேட் புற்றுநோய் என பல ஆபத்துகளை அள்ளித் தருகிறது தாலேட்!