நினைவு நாள்: 18.2.1937
நீதிக்கட்சியின் பிதாமகர்கள் என்று போற்றப்படுபவர்கள் டாக்டர் சி.நடேசனார்,
பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோராவர்.
நீதிக்கட்சியின் தோற்றுவாய்க்கு மூலவித்து டாக்டர் சி.நடேசனார். சென்னை – திருவல்லிக்கேணி பெரிய தெருவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அந்தப் பெருமகனால் 1912இல் துவக்கப்பட்டதுதான் திராவிடர் சங்கம் (Dravidan Association) என்பதாகும்.
அந்தக் காலத்தில் கல்லூரியில் படிக்க வேண்டுமானால் வந்துசேர வேண்டிய இடம் சென்னைதான்.
பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் விடுதிகள் கிடையாது. பார்ப்பனர் உணவு விடுதிகளில், பார்ப்பனர் அல்லாதவர் எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடலாம்; ஆனால், தங்கிச் சாப்பிட முடியாது! எவ்வளவு பெரிய கொடுமை! கொடுமை!!
அந்த நேரத்தில் டாக்டர் சி.நடேசனார் அவர்கள் திராவிடர் இல்லம் (Dravidan Home) என்ற விடுதியைத் துவக்கினார். அந்தக் காலகட்டத்தில் பாலைவனத்தில் கிடைத்த சோலை அது என்பதில் அய்யமில்லை. பார்ப்பனர் அல்லாதார் இலவசமாகவே தங்கிப் படிக்க இந்த ஏற்பாடு என்பது அடடே, எவ்வளவு பெரிய மகத்தான செயல்!
சென்னை மாநில சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முத்திரைகளைப் பொறித்தவர்.
இன்றைய தலைமுறையினர் பெற்றிருக்கும் வாழ்வுக்கும், வளத்துக்கும் இந்தத் திராவிடர் இயக்க ஆணிவேர்கள் அன்றோ காரணம்!
வாழ்க பெரியார்! வாழ்க நடேசனார்!