ஒரே செடியில் கத்திரிக்காயும் காய்த்து அதன் வேரில் உருளைக்கிழங்கும் விளைந்தால் எப்படியிருக்கும்?
மேஜிக் போலிருக்கும் இதை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். கத்திரிக்காயை முட்டைத் தாவரம் என்றுதான் அழைக்கிறது மேற்குலகம். சிப்ஸ் என்றால் அவர்களுக்கு உருளைக்கிழங்குதான். ஆக, எக் அண்டு சிப்ஸ் (Egg & Chips Plant) என்னும் பெயரில் இந்த இரண்டையும் கலப்பினம் செய்து ஒரே செடியாக்கும் ஆராய்ச்சி அங்கே பல ஆண்டுகளாக நடக்கிறது. இப்போது ஒரு வழியாக இது சாத்தியமாகிவிட, இங்கிலாந்தைச் சேர்ந்த தாம்சன் மற்றும் மார்கன் நிறுவனம் இதற்கான விதைகளை விற்கவும் துவங்கிவிட்டது.
உருளைக்கிழங்கைத் தனியாகவும், கத்திரியை தனியாகவும் பயிரிட்டு வளர்க்க அதிக இடம் தேவை. அந்தச் சிக்கலை இது தீர்த்து வைக்கிறது.
பால்கனிகளில் தொட்டி வைத்துச் செடிகளை வளர்க்கும் தாவர ஆர்வலர்களுக்கும் ஏற்றபடி இந்தச் செடி இருக்கிறது.