நூல்: “நமக்கேன் மூடனும் மூடன் படைத்த கடவுளும்’’
ஆசிரியர்: இரா.மகராசன், சமூக ஆர்வலர்
கிடைக்குமிடம்: வள்ளுவன் பதிப்பகம், 22, செயபாண்டியன் தெரு, நாசரேத் – 628 617.
தொலைபேசி: 99943 44276
Email: aarthi.ayyakani@gmail.com
விலை: ரூ200. பக்கங்கள்: – 226 – பாகம் 1,2
மன்னிக்கவே முடியாத நம்பூதிரிகளின் இழிவு ஆட்சி.
தென்தமிழ் நாட்டில் வாழ்ந்த பதினெட்டு ஜாதி இந்துக்கள் மார்பிலே சேலை போடக்கூடாது என்பதற்கான எதிர் வினையல்ல; அதன் விளைவு வேறானது.
ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றி ஆண்டாலும் அவர்கள் ஆட்சிக்கு உட்படாத 560க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் குட்டி மன்னர்களின் ஆட்சியே. அதில் ஒன்று திருவிதாங்கூர் மன்னரின் கொடுங்கோல் ஆட்சி அஃதாவது மனு என்பானின் வர்ணாசிரம நம்பூதிரிப் பார்ப்பனர்களின் அதர்ம ஆட்சியே.
ஜாதிய வர்க்கக் கொடுங்கோல் ஆட்சி என்று மேதை அம்பேத்கர் கூறுவார்:
அம்பேத்கர் வழியில் தொல்.திருமாவளவன் நடந்து வருவது நல்ல முயற்சியாகும்.
வாழத் தகுதியற்ற மக்கள் அவர்ணர் எனப்படுவார். எல்லா வகையிலும் வாழத் தகுதியான உயர் ஜாதிக்காரன் சுவர்ணர் எனப்படுவான். சுவர்ணன் சொக்கத் தங்கம். அவர்ணர் அசிங்கப்பட்ட அடிமை கீழ் ஜாதி.
இவர்கள் தாய்_தந்தை_பிள்ளை விற்கப்பட்டு ஆடு மாடு போல் தனியாகிட வேண்டும். இவர்களைப் பார்த்தாலே பாவம். இவர்களைத் தொட்டாலே தீட்டு.
கன்னியாகுமரி ஒட்டிய தென்திருவாங்கூர் பகுதியில் வாழ்ந்த 18 ஜாதியார் தீண்டத்தகாத இந்து மக்கள் என நம்பூதிரிப் பார்ப்பனரால் பட்டியலிடப்பட்டார்கள். இவர்கள் இந்துக்களே இல்லையா?
இவர்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள்:
தாலிக்கு வரி, ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்பு அளவுக்கு ஏற்றவரி, முதியோரின் ஊன்று கோலுக்கு வரி, மண் வெட்டிக்கு வரி, கருப்புக்கட்டிக்கு வரி அரிவாளுக்கு வரி, அரிவாள் பெட்டிக்கும் வரி, ஓலைப் பெட்டிக்கு வரி, முறுக்குத் தடிக்கு வரி, வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் பூனைக்கும் வரி, வளர்க்கும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் வரி, கோழிக்கும் புறாவுக்கும் வரி, வீட்டில் வளரும் தாவரங்களுக்கும் வரி, தலை முடிக்கும் வரி, பனைக்கு 7 காசு வரி, மாமரத்துக்கு 12 காசு, புன்னைமரத்துக்கு 12லு காசு வரி, புளிய மரத்துக்கு 3 காசு, குடிசைக்கு வரி.
இப்படி 111 வரிகள் விதிக்கப்பட்டதாக திருவாங்கூர் சமஸ்தான 1864ஆம் வருட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவர்கள் செய்யக் கூடாதவை
இப்பெண்கள் மார்பிலே சேலைபோட்டு மறைக்கக் கூடாது. ஆண்கள் முட்டுக்குக் கீழ் வேட்டி கட்டப்படாது. தோளில் துண்டு போடக் கூடாது. காலணி (செருப்பு) அணியக் கூடாது. ஓட்டு வீட்டில் வாழக் கூடாது. மழையோ வெயிலோ குடை பிடிக்கக் கூடாது. பசு மாடு வளர்க்கக் கூடாது. செய்த வேலைக்குக் கூலி கேட்கக் கூடாது. நம்பூதிரிகள் மற்றும் உயர் ஜாதியினர் ஏவும் வேலையைத் தட்டக்கூடாது. “கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே’’. பெண்கள்