கவிதை : வாயார – மன்மார – கையார வாழ்த்துவோம்!

டிசம்பர் 01-15 2019

நூற்றாண்டும் கண்ட

திராவிட இயக்கத்தின்

தொடர்ச்சியில் _ ஒரு

தொண்டர் நாதன்!

 

துணிவும் உணர்வும்

கொண்ட ஒருவன்

கொள்கை வாளுருவி

வருவான் என்று

தொலைநோக்கோடு

சொன்னார் தத்துவ

ஆசான் தந்தை பெரியார்!

 

தமிழகத்தின்

முதல் பேராசிரியர்

பெரியார் வாயாலே

‘ஆசிரியர்’ என்று

அழைக்கப்பட்டு

அடையாளம் காட்டப்பட்டவர்!

 

அப்படி யென்றால்

அவன்தானே எங்கள்

தலைவன்!

“உன் பகைவன் யார்?

உன் யோக்கியதையை

எடைபோட?

அதுவே எடைத் தராசு’’

என்று சொன்ன தலைவன்

எங்கள் ஈரோட்டுப் பகலவன்!

 

‘வீரமணி’ எனும் சொல்

வேதியக் கோட்டையில்

வீசப்படும் வெடிகுண்டு!

சமூக அநீதி பேசும்

சழக்கர்தம் மென்னியை

கவ்விப் பிடிக்கும்

காலத்தின் கொறடு!

வீரமணி பெயரைக் கேட்டாலே

வியர்க்குதே

வேதியக் கும்பலுக்கு!

 

மூட்டை மூட்டையாய்க்

குவிந்து கிடக்கும்

மூடத்தனத்தின்

மூச்சை அடக்கும்

வீரனாய் வந்தான்

எங்கள் தலைவன்!

 

திரண்ட உலகத்தின்

தேகத்தை மூடிய

முரட்டுப் போர்வையாம் _ மூட

இருட்டினை

விரட்டியடித்திட

வெண்தாடி வேந்தரிடம்

வேல்வாள் வாங்கி வந்த

விவேக சிந்தாமணி!

 

குள்ளமான இந்த மனிதரை

பெரிய அமெரிக்கா

தேடிப் பிடிக்கக்

காலம் தேவைப்பட்டது!

 

ஒரு நாள் கண்டது

வியப்பில் வீழ்ந்தது!

மனித நேய வாழ்நாள்

சாதனையாளனை

கண்டேன் கண்டேன் என்று

மகுடம் சூட்டி

மகிழ்ச்சியில் குளித்தது!

 

எண்பத்து ஏழில்

எழுபத்து ஏழு

பொதுத்தொண்டு

அகவை கண்ட

தூய மணி _ இந்தத்

தொண்டர் நாதனை

தோளில் சுமந்து

வாழ்த்துவோம்

வாழ்த்துவோம்!

வாயார, மனமார

கையார

வாழ்த்துவோம்

வாழ்த்துவோமே!

கவிஞர் கலி.பூங்குன்றன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *