மன ஆடைகளில்
அப்பிக் கிடக்கும்
ஆணாதிக்க அழுக்குகளை
தடமின்றி அகற்றிட
நித்தமும் உழைக்கும்
சலவைக்காரர்!
விதி என்று சொல்லி
சதிசெய்து மக்களை
மதி பிறழச் செய்யும்
வீணர்களை வீழ்த்தும்
வீரமிகு படைத்தலைவர்!
பெரியாரின் வழியில்
திராவிடப் பெருநிலத்தில்
சுயமரியாதை ஏரோட்டி
பகுத்தறிவு நாற்று நட்டு
சனாதனக் களையெடுத்து
சமூகநீதி விளைவிக்கும் உழவர்!
ஜாதிய மதிலெழுப்பி
ஒன்றுபட்ட சமூகத்தை
உயர்வு தாழ்வாய்ப் பிரிக்கும்
கயமைநோய் அகற்றும்
சமுதாய மருத்துவர்.
ஓய்வை ஒதுக்கித்தள்ளி
உலகமெல்லாம் பயணித்து
பெரியாரியல் பாடத்தை
விரிவாகப் போதிக்கும்
வியப்புமிகு ஆசிரியர்!
பாசு.ஓவியச்செல்வன்