தமிழக எல்லைகள் வரலாற்றுச் சான்றுகளுடனும் தக்க மேற்கோள் களுடனும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்திச் சென்றனரே தவிர மொழி அடிப்படையில் மகாணங்களைப் பிரிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டி, மாகா ணங்கள் பிரிந்தவிதம் எளியமுறையில் தகுந்த விளக்கங்களுடன் விளக்கப்பட் டுள்ளது.
மொழிவாரி மாநிலமாக முதலில் ஆந்திர மாநிலம் பிரிந்ததை விளக்கி, சென்னை மாநிலம் அமைந்த வரலாறு சட்டமன்ற நிகழ்வுகளில் தலைவர்களின் விவாதங்கள், வேண்டுகோள் களுடன் இடம் பெற்றுள்ளது.
மேலும், தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைப் போராட்டங்களும் விளக்கப்பட்டுள் ளன. மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள், மாநாடுகள், இயற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருப்பதே தமிழ்நாட்டு எல்லைப் போராட்டமும பெயர் மாற்றமும்.
தேசம் என்றால் என்ன என்பதன் விளக்கம் மார்க்சியக் கோட்பாடுகளி லிருந்து கொடுக்கப்பட்டு, தேசபக்தி என்பதன் விளக்கம் இன்றைய சமுதாயச் சூழல்களோடு – அவலங்களோடு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இளைஞர்களின் நிலை, காதலின் நிலை, திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களில் வரும் காதல் காட்சியினை ரசித்துப் பார்த்துக் கருத்துக் கூறுவர். தங்கள் வீட்டில் என்றதும் மாறும் மக்களின் மனப்போக்கு, கலப்புத் திருமணம் என்ற வார்த்தை பற்றிய தந்தை பெரியாரின் சாட்டையடிக் கேள்வியும் சிந்திக்க வைக்கும் பதிலும் இடம் பெற்றுள்ளது. ஜாதி குறித்த இன்றைய மக்களின் மனநிலையினை விளக்கி, ஜாதியற்ற நிலையினை நம் சமுதாயத்தில் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
அன்றைய – இன்றைய குழந்தை வளர்ப்பு நிலை, பெற்றோரின் நிலை, உறவுமுறைகள் அழிந்துவரும் நிலை, குழந்தைகளை உருவாக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது.
இன்றைய மருத்துவ உலகின் அவல நிலை, இன்றைய மக்களின் உணவு முறைகள் பற்றிய கருத்துகள் சிந்தனைக்குரியன.
இன்னும் கொஞ்சம் ஆழமாக – ஆணித்தரமாக – உக்கிரமாக அவலங்க ளுக்கான தீர்வுகளை விளக்கியிருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பதே ரௌத்திரம் பழகு.