நூல்: பார்ப்பனப் பிடியிலிருந்து பாமரர்களை மீட்போம்!
ஆசிரியர்: வடசேரி நடராசன்
வெளியீடு:
சுந்தரம் பதிப்பகம், 49பி, எம்சிஜி அவென்யூ,
6ஆவது தெரு,
மாதவரம் பால் பண்ணை,
சென்னை – 600 051.
பக்கங்கள்: 64 விலை: ரூ.30
ஆரியத்தின் சூழ்ச்சிகளை விளக்கி அறிவு வெளிச்சம் தரும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாணயமற்ற கார்ப்பரேட் விளம்பரத்தால் மக்களை ஏமாற்றி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பார்ப்பன பாசிச இந்துத்துவ அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை விளக்குகிறது இந்த நூல்.
தமிழர்கள் கல்வி கற்கக் கூடாது என்று தடைபோட்டு ஆரியம் செய்திருந்த நயவஞ்சகத்தைத் தோலுரித்துக் காட்டுவதுடன், இன்றும் தமிழ்நாடு தவிர்த்த மாநிலங்களிலும் மத்திய அரசுப் பணிகளிலும் உள்ள பார்ப்பன மேலாதிக்கத்தை புள்ளி விவரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.
மீண்டும் இராமாயணம், மகாபாரதம் போன்ற மூடநம்பிக்கைக் கதைகள் புதிய வடிவங்களில் பரப்பப்படுவதைக் குறித்து கண்டிப்பதுடன் தமிழர்களை எளிய நடையில் விழிக்கச் செய்கிறார் இதன் ஆசிரியர். பார்ப்பனர்கள் தங்கள் இனம் எவ்வித இன்னலும் வசதிக் குறைவும் இல்லாமல் சுகவாழ்வு வாழ, நம் மக்களை இந்துக்கள் என்கிற பெயரில் அடியாள் கூட்டம்போல் வைத்திருப்பதை விளக்குகிறது இந்நூல். மேலும், நம் மக்களுக்காக ஏதேனும் நல்ல திட்டங்களை அரசுகள் கொண்டுவந்தால், அவற்றை எதிர்த்து, வரவிடாமல் செய்யும் பார்ப்பனியத்தின் மோசடியை முறியடிக்கிறது இந்நூல்.
சமூகநீதி உணர்வாளர்கள் தங்கள் நண்பர்களுக்கு சமூகநீதியின் தேவையையும் பார்ப்பனியத்தின் கோர முகத்தையும் உணர்த்த இந்த நூலைப் பரப்பலாம்; பரிசளிக்கலாம்.