(நெருங்கிய நண்பர்கள்)
BESTIE
தங்களின் நிறைவேறாத விருப்பங்களை பெற்றோர் தன் பிள்ளைகளின் மீது திணிப்பது இன்றும் தொடரத்தான் செய்கிறது. பெரிதாக மாற்றம் வந்துவிடவில்லை. முக்கியமாக கல்வித்துறையில்! சம்பந்தப்பட்ட மாணவர்களின் மன உளைச்சல்களுக்கு மாற்று பெரும்பாலும் இல்லாமலேயே போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாணவனின் மன உளைச்சளை சிந்திக்கும்படியும் ரசிக்கும்படியும் சொல்லி, அதற்குத் தீர்வும் சொல்ல முயற்சித்திருக்கிறது BESTIE (நெருங்கிய நண்பர்கள்) குறும்படம். நட்பு முதலில் தன்னை விரும்ப வைக்கிறது. அதன்மூலம் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதன்மூலம் கல்வியைக் கற்றுக்கொண்டே நாம் விரும்பியதை எல்லாம் எட்ட வாய்ப்பு உருவாகிறது என்று விரிகிறது இக்குறும்படம். நல்ல முயற்சி! எழுதி இயக்கியிருக்கும் நிவாஸ். பாராட்டுக்குரியவர்! லெமுரியன் AXE தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
– உடுமலை