-மு.கீதா
தலைகுனிந்த பயிரால்
தலைநிமிர்ந்த தமிழரினம்
தன்னிகரில்லா உழவினைப் போற்றி
தரணிக்கு உணர்த்தும் பண்பாட்டு விழா!
வெடித்த வயல்களில் நிறைந்த சருகுகள்
வற்றிய நீர்நிலைகளைக் கண்டு ஓலமிட
கைவிரித்த காவிரியும் அடிவயிற்றில் அடிக்க
உழவரின் கண்ணீரில் நனைந்ததே!
காவிகளின் சூழ்ச்சியை முறியடிக்க
கருப்புச் சட்டை சூழ எழுந்தது படை…
கார்மேகமென திரண்டதே திராவிடம்
தைப்பொங்கல் திருநாளை வரவேற்க
தகதகவென எழுந்ததே எழுச்சிப்படை!
உழவர்தம் வாழ்வே
உலகிலுயர் வாழ்வாய் உயரட்டும்.
வீரியமாய் விளைந்த விதைகள்
விரிமரமாக தமிழர்புகழை விதைக்கட்டும்….
கீழடியில் எழும்பும் தமிழ்ப்பண்பாடு
கீழ்த்திசையெங்கும் பரவட்டும்!
காரிருள் காவி அழியட்டும்…
சரித்திரம் படைத்த தமிழன்
ஜாதியை ஒழித்தே இணையட்டும்…என
பொங்கிடும் பொங்கல்….
பறையடித்தே உலகிற்கு உரைக்கட்டும்!