அருகம்புல்லுக்கு ‘ஹீமோஸ்டேடிக்’ என்ற ஒரு குணம் உண்டு. அதாவது ரத்தத்தை உறையச் செய்யும் குணம். அதனாலேயே அதிக ரத்தப் போக்கு உடைய பெண்களுக்கு அருகம்புல் ஜீஸ் குடித்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.
இதய நோய் உள்ளவர்களுக்கு ‘பிளட் தின்னர்’ மருந்து கொடுப்பார்கள். அதாவது ரத்தம் ரத்தக் குழாய்களில் உறையாமல் இருப்பதற்கான மருந்து கொடுப்பார்கள். இதுபோன்ற மருந்தை எடுக்கும் வயதானவர்கள், உடம்புக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டு அருகம்புல் ஜீஸ் குடிக்க, அது இரத்தத்தை உறையச் செய்து உயிருக்கே ஆபத்தாய் முடியலாம்.
அதனால் நல்லது என்று நினைத்துக்கொண்டு கண்டதையும் சாப்பிடாமல் எந்த ஒரு மருந்தையும் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும்.