மகத்தான பயன்தரும் மணத்தக்காளி
வயிற்றிலும் குடல் பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும், வாய்ப்புண் ஏற்பட்ட உடன் முதல் மருத்துவம் மணத்தக்காளி கீரைதான். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம்.
கீரை வகையில் முதன்மையானதும் தக்காளிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான மணத்தக்காளி சிறு சிறு மணிகள் போன்ற பழங்கள் பெற்றிருப்பதால் ‘மணித்தக்காளி’ என்றும் அழைக்கப்பட்டு நாளடைவில் மணத்தக்காளியானது என்பர்.
மணத்தக்காளி கீரை பச்சை நிற இலைகளைக் கொண்ட செடி வகையைச் சார்ந்தது. வெள்ளை நிறப் பூக்களைப் பூக்கும், கறுப்பு நிறத்தில் உருண்டையான சிறு பழங்களைக் கொண்டது. இதன் பழுக்காத காய்களை உட்கொள்வது நல்லதல்ல.
வீட்டு மருத்துவன்
இலைகளைப் பருப்புச் சேர்த்துக் கடைந்து, மணத்தக்காளி வற்றலைத் தூவி கூடவே சீரகத்தையும், சின்ன வெங்காயத்தை¬யும் சேர்த்துச் சமைத்தச் சாப்பிட வயிற்றில் புண், ரத்தக் குறைவு, உடற்சோர்வு போன்றவை நீங்கும். குழந்தைகளுக்கு மணத்தக்காளிக் கீரையைக் கொடுக்க உடல் ஊட்டம் பெறும். மணத்தக்காளிக் கீரையுடன் பசலைக் கீரையைச் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு.
நுரையீரல் பிச்சினையை தீர்க்கும், சிறுநீரை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். செரிமானப் பாதையில் உண்டாகும் புற்றுநோய் சார்ந்த ஆய்வில் மணத்தக்காளி சிறந்த முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் (Anti-Proliferative activity) சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
வயிற்றிலும் குடல் பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும், வாய்ப்புண் ஏற்பட்ட உடன் முதல் மருத்துவம் மணத்தக்காளி கீரைதான். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளிச் செடியை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வெள்ளைப்படுதல் குறையும். மணத்தக்காளியை முறைப்படி சாப்பிட்டு வந்தால் ‘திருமணத்தால் உண்டாகும் மகிழ்ச்சி’ ஏற்பட்டு உடல் பலம் பெரும் என சித்த மருத்துவம் கூறுகிறது. உழைப்பாளிகளின் உடல் உள்ளுறுப்புகளைச் சாந்தப்படுத்தி உடல் வெப்பத்தைக் குறைக்கும் ‘இயற்கையின் கூலிங் ஏஜென்ட்’ என மணத்தக்காளிச் செடி அழைக்கப்படுகிறது!