நாட்டுக்கு உழைப்பதில் நாம் முந்தி நிற்போம்!

ஜனவரி 16-31 2019

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

 

 

கறுப்புடையை மாட்டிக் கொண்டு திராவிடத்தின்

இழுக்குநிலை காட்டிக் கொள்ள எழுந்தது பார்!

நெருப்புமிழ் பட்டாளம் நெஞ்ச எரிச்சலுடன்!

 

உறுமுகின்றார் சமயப் பித்தர்! உயர்ந்த சகாப்தம்

‘தீராது தீய எண்ணத்தார் சூழ்ச்சி வேரோடு பெயர்க்க

வீராதி வீரர் முழக்கம்! வைதீகர் கலக்கம்! என்றொரு

வீரன் பேரிகை கிழித்தான்!

‘கொந்தளிப்பில் முமுறுகின்றார் எந்நாட்டார்!’ இதைக்

                                                குயில் கூவிற்று!

“சோலையிலே – தென்றலிலே ‘சொகுசு’ பின்னர்

சொந்த நாட்டைக் காப்பாற்ற சுழற்று வாளை!’

                                சொன்னார் பெரியார்!

‘காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு,

கணவனுக்கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு!’

                                                இது கவிஞர் கருத்து.

இந்நாட்டான் இங்கு வாழ்ந்தான் ஈடில்லான்

எந்நாட்டையும் புறங்காணும் புகழுடையான்

தமிழ்நாட்டான் தலைகுனிந்தான்! இதோ நிமிர்ந்தான்!

எழுச்சியுற்ற மாணவன்தான் ஏறுநடை சிங்கம்தான்!

                                                                இனிக்

கொழித்துவிட்ட உமிகள்தான் குள்ளநரிக் கூட்டத்தார்.

பழித்துவிட்டான் பகுத்தறிவால்! பக்தி மதம் கடவுள்

                                                எல்லாம் பாழ்! பாழ்!!

விதியென்பார்! வினையென்பார்! வாழ்வு பொய் என்பார்

மதிபெற்ற மாணவன் இதை நம்ப மாட்டான்.

வாழத்தான் வேண்டுமென்றும் வாழ்க்கையிலே

                                                ஆரியத்தைச்

சாடத்தான் வேண்டுமென்றும் சபதம் ஒலித்து விட்டான்!

பாட்டுக்குள் பதிந்துவிடும் பாயும் இளமைகாள் நும்புகழ்!

நாட்டுக் குழைப்பதிலே! நான் முந்தி! என்று நிற்பீர்!

வாழியவே! வாழி!

(உதயம், 10.4.1946, பக்கம் 7)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *