நினைவு நாள்: 21.01.1924
லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார்.
ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனைப் பெயரான ‘லெனின்’ என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். பொதுவுடமைக் கொள்கையை நிறுவிய உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் மீது ஆர்வம் மிக்க சீடரான லெனின், மார்க்ஸ் அடிக்கடி கோடிட்டுக் காட்டிய கொள்கைகளை நடைமுறையில் தீவிரமாகச் செயற்படுத்தினார். லெனின் உருவாக்கிய பொதுவுடமைக் கொள்கையினால் வரலாற்றில் அவர்கள் செல்வாக்கு மிக்க மாந்தர்களுள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.
1917 ஜூலையில் முதலில் ஒரு புரட்சியில் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தப் புரட்சியின் எதிரிகள் இவரை ஜெர்மன் கையாள் என்று காட்ட முயன்றனர். அதனால் இவர் முதலில் பெட்ரோகிராடு நகரில் ஒரு குடும்பத்தினருடனும், பின்னர், பின்லாந்திலும் ஒளிந்திருந்தார். பின்னர், 1917ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தாயகம் திரும்பி, புதிய ஆட்சியின் தலைவரானார்.
லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை நடைமுறை அரசியலில் செயல்படுத்தினார். 1917ஆம் ஆண்டு நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள். லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளின் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்கு பெற்றார்.
லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளை பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும், உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார் தந்தை பெரியார்.