நூல்:
கல்வித் துறையில் பேரொளியாய்… இராணி விக்டர்
தொகுப்பாசிரியர்: எஸ்.ஜனார்த்தனன்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்,
7 (ப.எண்), தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600 017.
பக்கங்கள்: 154 விலை: ரூ.100/-
கல்வித் துறையில் ஆசிரியராய், தலைமை ஆசிரியராய், மாவட்ட கல்வி அலுவலராய், கல்வித் துறையில் துணை இயக்குநராய் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளர் இராணி விக்டர் அவர்களைப் பற்றிய அவர்களுடன் பணியாற்றிய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களின் அனுபவங்களின் தொகுப்பே புத்தகமாகும்.
கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் பயன்மிக்க அனுபவங்களை வழங்கும் நூல்.
– வைகலை