குறும்படம்

டிசம்பர் 16-31 2018

தலைப்பில்லாத குறும்படம்

இது குறும்படத்தின் தலைப்பல்ல; ஆனாலும், ஏறக்குறைய 2 லட்சம் பேர்கள் வரை பார்த்திருக்கிறார்கள். கதை, “தன் திறமையை உணராததுதான் மாற்றுத் திறனாளித்தனம்’’ என்பதாக அமைந்துள்ளது. முதன்மைச் சாலை ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் (கால் மட்டும் சற்று தாங்கியபடி நடக்கிறார்) பிச்சை எடுக்கிறார். சிக்னலில் நிற்கும் ஆட்டோவை நெருங்கி அதன் ஓட்டுநரிடம் கையேந்துகிறார். அவர் மறுக்கிறார். அடுத்து, சவாரி செய்யும் நபரிடம் கையேந்துகிறார். அவர் காசு போடுகிறார். கையேந்தியவர் போன பிறகு, ஆட்டோ ஓட்டுநரிடம், “ஏம்பா அவருடைய சிரமம் உனக்கெப்படித் தெரியும்? ஒரு ரூபாய் போட்டா குறைஞ்சா போயிடுவே?’’ என்கிறார். நிறுத்தம் வந்த பிறகு, “சில்லறை இல்லை. போய் அந்தக் கடையில் வாங்கிட்டு வா’’ என்று சொல்ல, ஓட்டுநர், காசை வாங்கிக்கொண்டு, கையில் ஊன்றுகோலுடன் இறங்கி நடக்கிறார். குறும்படம் முடிந்துவிடுகிறது. இறுதியில் Ignorance of the ability brings disability என்ற வாக்கியத்தோடு நிறைவு பெறுகிறது இந்த ஒரு நிமிடக் குறும்படம். ஜார்ஜ் பவுல் எழுதி இயக்கி இருக்கிறார். யூ டியூபில் World’s best 1 minute short film tamil என்று பெயரில் இக்குறும்படத்தைக் காணலாம்.

– உடுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *