சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் குடும்பத்தின் சார்பில் பெரியார் மணியம்மை மருத்துவ-மனைக்கு ரூ.4 லட்சத்துக்கும் மேல் நன்கொடை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக் கருவிகள் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டதை யொட்டி அக்குடும்பத்தினரைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.
பார்வதி நன்னன் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், வேண்மாள் அவர்களைப் பாராட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களும், அவ்வை தமிழ்ச்செல்வன் அவர்களைப் பாராட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
(நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா, 20.11.2018)