Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நினைவு நாள்: 10.11.1938

கெமால் பாஷா அவர்கள் ஒரு பெரிய விஷயத்தை வழிகாட்டியாகக் காட்டிச் சென்றார். அதாவது, தேச விடுதலை, மக்களின் சமூக சுதந்திரத்தைப் பொறுத்திருக்கின்றது என்பதை நன்றாகக் காட்டிச் சென்றார். அரசியலுடன் மதக் கொள்கை கலக்கக் கூடாது என்றும், மதத்தைவிட மானம் பெரிது எனக் காட்ட வேலை செய்தார். ஆனால், ஒரு சிலர் நம்நாட்டில் அரசியலில் மதத்தைப் புகுத்தி அதை வளர்ப்பதையே தேசிய விடுதலை என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால், வீரர் கெமால் அவர்கள் நாட்டின் விடுதலை தனியெனக் கருதி அதனின்றும் மதத்தை, சடங்கை கத்தரித்தார். அரசியலில் மதம் குறுக்கிடக் கூடாது என்றார்.

– தந்தை பெரியார்